பக்கம்:தாய்வீட்டுச் சீர் (சிறுகதை).pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

39 'தெய்வமே!...”* மருதமுத்துவின் மேனியில் தன் மேனியை அணைத்து அழுதாள். ராசாத்திக்குட்டி!... அப்பா. அப்பான்னு இப்பத்தானேம்மா மழலைபேச கத்துக் குட்டுவாரே...நாளைக்கு நீ அப்பாவைக் காட்டச் சொல்லிக் கேட்பீயேம்மா, நான் ஒனக்கு யாரைக் காட்டுவேன்! தெய்வமே...பாழத்த தெய்வமே...!' மங்கலநாண் அவளது விழிநீர்ப் பெருக்கில் புனித நீராடியது. வந்தவர்கள் என்ன சொன்னர்கள்? சிம்னியில் திரி அல்லாடியது. 'அஞ்சல!...” யார் அழைப்பது? விதியா? வினையா? நாகப்பன் நீர்மல்க நின்ருன். கரங்கூப்பி நின்றன்: *அஞ்சலை! என்னை மன்னிக்க மாட்டாயா?... எவ்வளவோ கட்டுப்படுத்திப் பார்த்தேன். முடியலே!...மருதமுத்து அண்ணுச்சியோட உசிரைக் குடிச்சுப்புடுச்சு லாரி' அவன் தேம்பினுன், - வீறு பூண்டெழுந்தாள் அஞ்சல. என்னை ஏமாத்தின உன்னுேட வாழ்க்கையை என்னைக் காலும் ஒரு நாள் நாசமாக்காமல் இருக்கமாட்டேன் நான்' அப்படின்னு வீராப்புச் சபதம் செஞ்சபடியே நீ இப்ப என்னையே நாசமாக்கிப்பிட்டியே பாவி!...முன்னுடியே திட்டம் தீட்டித்தான் இந்தத் தீவினையை செஞ்சு, என் தாலி யைப் பறிச்சுக்கிட்டிருக்கே!...நீ எமன்!...பாவி!...” பத்திரகாளியா அவள்? நாகப்பன் உயிர்க்கழுவில் துடித்தான் 'சாமிசத்தியம் இது!...எப்பவோ ஏமாற்றத்திலே சொன்ன பேச்சு வச்சநீ.