பக்கம்:தாய்வீட்டுச் சீர் (சிறுகதை).pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

65 லாந்திப் பிடிக்க முனைஞ்சப்ப, நான் உள்ளே பறிஞ்சு வந்த தேன்; எங்கையிலே தம்பிக்கோட்டை வீச்சரிவாள் இருந் திச்சு. அதை அவரு கையிலே நீட்டினேன்; இதாலே என்னைக் கண்டதுண்டமாக்கிப் போட்டுப்புட்டு, அப்பாலே எங் கையைப் பிடிண்ணு சொன்னேன்; நான் உங்க சொத் தாகி ரொம்ப காலமாச்சுதின்னும் பொய்ச் சத்தியம் செஞ் சேன். பூ, கசங்கின பூவா?’ண்ணு காறித் துப்பிப்புட்டு நழுவினரு செங்கோடன். எங்கவூட்டுச் சொத்தான அந்த அரிவாளைப்பத்தி அடியோட எனக்கு நெனப்பே அத்துப் போச்சு; அந்தச் செங்கோடன் நாணயமா அதை அனுப்பி வச்சிருக்காரு, தன் பரிசுபோல்!...முரட்டுப் புத்தியும் திருட் டுப் புத்தியும் எப்பத்தான் அந்த ஆம்பிள்ளைக்கு மாறப் போவுதோ?...ஒருவாட்டி செயிலுக்குப் போயும் பாடம் படிச்சுக்கலிங்களே, மச்சான்! பாவம்!” பவளக்கொடியின் கண்ணிர் பூமாலை தொடுத்தது. ‘எம்மேலே அந்த ஆளுக்கு உண்டான வஞ்சனைக.ட மாறிப் போச்சுப்போலே, பவளம்! என்று இறங்கு குரலில் வெளியிட்டான் சோலையப்பன்.

ம்!’ என்று நெடுமூச்செறிந்தாள் பவளம்:

※ எழு பொழுது. பவளக்கொடி வாசலுக்கு வந்தாள்; சிந்தித் சிதறிக் கிடந்த பனங்கறுக்கு மட்டைகளேப் பார்த்தபிறகு, உள்ளே சென்ருள். தம்பிக்கோட்டை வீச்சரிவாளை எடுத்து வந்து மட்டைகளின் கறுக்குகளைச் சீவி வீசி, பிறகு, அவற்றைக் கொண்டு 'நார் திரிக்க வேண்டுமென்பது அவளது உள்ளக் கிடக்கையாகும். மேற்குச் சீமையிலிருந்து நார் வாங்கிக் கொள்முதல் பண்ண நாடார் வண்டிவந்து, சாலைச்சந்தைப் பேட்டையில முகாம் போட்டிருப்பதை அவள் அறியமாட் டாளா, என்ன?