பக்கம்:தாய்வீட்டுச் சீர் (சிறுகதை).pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 உள்ளே சென்றவள் வெளியே வந்த போழ்தில், பவளக் கொடியுடன் வேதனையும் நெட்டுயிர்ப்பும் துணை சேர்ந்து வந்தன. ஆமா, அந்த வீச்சரிவாள் ராத்திரிக்கூட கண்ணுக்கு மெய்ப்பனையாத் தெரிஞ் சி தே?...இப்ப காணலையே?. .அசலூர் போயிருக்கிற மச்சான் நாளைக்கு மடங்கித் திரும்பினடியும் கேட்டாக்க, மலைச்சுப் போயிடு வாகளே? பெண்மைச் சத்தியின் கண்டெடுப்புப் பொருளான வீரத்தைத் துணையிருக்கச் செய்துவிட்டு உள்ளே படுத்தாள் பவளக்கொடி, "மச்சானுக்கு லாவார நோக்கம்தான் ஒசத்தி, கஞ்சிதண்ணி வளியாக் கெடச்சிருக்குமில்ல?. .ம், எங்கே சத்தரம்னு இம்மா நேரம் விளுந்து கெடக்கும்?... நாளைக்கு வந்ததும் வசமாக் கஞ்சி காச்சி ஊத்தவேணும்!” இரவு, நிலவின் கால வரம்பு கழிந்த நேரம் இருட்டின் நிறம் அச்சம் விளேத்தது. பவளக்கொடி இருந்திருந்தாற்போன்று எழுந்து அமர்ந் தாள். கண் இமைக்கும் நேரத்துக்கு முன் அவள் கேட்ட அந்தச் சத்தம் இதயத்தில் எதிரொலித்தது. மாமரக் கதி வைத் திறந்துகொண்டு, வாசல் தட்டியை நகர்த்திவிட்டு வெளியே வந்தாள் பவளக்கொடி; ஆ!' என்று கூச்சலிட் டாள்! கையிலிருந்த சுவரொட்டி விளக்கு அல்லாடியது! அங்கே செங்கமலம் நின்ருள். அவளுக்கு எதிரே செங் கோடன் நின்றன். அவன் கையிலிருந்த 'தம்பிக்கோட்டை வீச்சரிவாளின் முனையிலே குருதித் துளிகள் வழிந்தன. செங்கமலம் வலது கையை இடது கையில்ை இறுகப் பிடித் துக் கொண்டிருந்தாள். வலது கையின் முழங்கைப் பகுதி அப்படியே வெட்டப்பட்டிருந்தது பவளக்கொடி ஒரு கணம் சிலையாளுள், காலையில் செங்க மலம் தன் வீட்டை நாடி வந்த நடப்பு நினைவில் குதிர்ந் தது. பவளக்கொடி அக்கா, நீ முதலிலே என்னை மன்னிச் சுக்க. உன் ஆட்டு இந்த அரிவாளை நானேதான் திருடிக்