பக்கம்:தாய்வீட்டுச் சீர் (சிறுகதை).pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35 மங்களத்துக்கென்ன, அவளைப் பார்த்து விட்டால் அவள் அழகில் சொக்கிப் போகாமல் எந்த மாப்பிள்ளையும் தப்ப முடியாது!’ என்ருே ஒர் தினம், என் திருமணத்தின் முன் என் பெற். ருேர்கள் எனது கல்யாணம் பற்றி இப்படி விமரிசனம் செய்து கொண்டிருந்தார்கள். அது நினைவுக்கு வருகிறது. நிஜமாகவே நான் அப்போதெல்லாம் அழகின் உருவாகத் தான் திகழ்ந்து கொண்டிருந்தேன். அது ஒரு காலம்; இன்பப் பொழுது அது. அப்போதுதான் என்னே சேகரன் வலைவீசிப் பிடித்தார். என் அழகு அவரைக் கொள்ளை கொண்டதாம். எனக்கும் அவரைப் பிடித்துவிட்டது. கண்நிறைந்திருந்தார். பி. ஏ. நடுத்தரக் குடும்பத்தினர். தேடிப்போன மூலிகையாக பெண்பார்க்கப் போன பயணத்தில் நான் சிக்கினேனும்; வலை தானுகவே விரிக்கப்பட்டதாம். கண்ணி வைத்து விசி றிப் பிடித்துக் கொண்ட வெற்றியில் எனக்குக் கூடப் பங்கு உண்டாம். ஏனென்ருல் நான் அவரின் மறுபாதியாம்-. இதை யெல்லாம் நினைத்துக் கொண்டால் இப்போது அழுகை முட்டி வருகிறது. அந்த என் உயிர்த்துணைவர்தான இன்று என்னை இப்படி வெறுத்து ஒதுக்கி விட்டார்? கால மலரின் இரண்டு இதழ்கள் உதிர்வதற்குள்ளாகவே மலர் வாடி விடுவதா, என்ன? என்ன்வோ தோன்றியது: திரும்பினேன்; பார்த்தேன். வீட்டின் முன்பகுதித் தோட்டத்தில் அப்போது தான் முகை யவிழ்ந்திருந்த மலரின் மதுவை உண்டு திளைத்துவிட்டு, மற். ருெரு மலருக்குத் தாவியோடிக் கொண்டிருந்தது. வண் டொன்று. r வண்டு: எண்ணினேன். என் பதி தோன்றினர். முதல் மலரைப்பற்றி நினைத்தேன். என் நிலை நினைவில் கிளை விட்டது. சந்தர்ப்பங்கள் எப்படி எப்படி யெல்லாம் கண்மூடித் திறப் பதற்குள் கருக்கொண்டு விடுகின்றன? காபியும் கையுமாக கமலா என் சமீபம் வந்தாள். நான் அழுது கொண்டிருந்ததைக் கண்டு விட்டாள். நான் கண் 6 . . . . . "