பக்கம்:தாய்வீட்டுச் சீர் (சிறுகதை).pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8? میو f வெளியாக ஓடிச் சென்று விட்ட மூன்று மாதங்களையும் விழுங்கி விட்டு ஏனே தானே வென்று என் உயிர்மட்டும் உடலில் ஒட்டிக் கொண்டிருந்தது. உலகத்தை அன்று தான் நான் திரும்பிப்பார்த்தேன். பலபல் நாட்களுக்குப் பின்-பலபல யுகயுகாந்திரங்களுக்குப் பிறகு, அன்றுதான் முதன்முதலாக பார்ப்பதுபோல என் துணைவரை மலர விழித்துப் பார்த்தேன், ஆசையுடன். ஆசைக் கனவுகளுடன்-புனர்வாழ்வு பெற்ற பூரிப்புடன். புதுவெள்ளத்தின் மிதப்புடன். ஆனல்-இத்தனைக்கும் என் உரிமையாளர் பதிலுக்கு ஒரு புன்னகை இழையைக்கூட உதிர்க்கவில்லை. அவர் முகம் வெறுப்பின் கோளமாகக் காணப்பட்டது. அந்தக் கோளத்தின் உருண்டை வடிவிலே எதிர்பாராத,ஏமாற்றத்தை என் பதியிடம் வெறுப்பு விரக்தி ஈடுபாடிழந்த போக்கு, பெரியதொரு துன்பப் பிளவு ஆகிய வைகளின் உருவங்களிலே கண்டேன் நான்! உலகம் நிலை பெயர்ந்து அதில் நான் வீழ்ந்தழிந்து விட்டமாதிரி துடித் துப்போனேன். அதுவேதான் என் தாம்பத்தியத்தின் திரும்பு முனையாக அமையுமென்று அன்று நான் என்ன கண் டேன் பேதை? நான் ஒருத்தி இருப்பதையே மறந்து விட்டார். அப்படி த் தான் சொல்லின அவரது அன்ருட நடவடிக்கைகள். இல்லை யென்முல், செத்துப்பிழைத்த மனவியிடம் ஆசைக்கு, ஆறு த லுக்கு ஒரே ஒரு தேறுதல் வார்த்தை கூடவா அவருக்குப் பஞ்சமாகி விட்டது? என் கணவர் என் முன் புதிராகத்தான் தோன்றினர். என் வாழ்வின் உயிர்ப்பேய் அப்பொழுது புதி ராகத்தானே இயங்கியது. .? ஆல்ை என் விதி...! இல்லையென் ருல் எப்படி அன்றைக்கு நான் அவரிடம் அந்தச் சபதத்தைக் கூறியிருக்க முடியும்...? ஏதோ ஓர் தெம்பு ஊறயது; வெற கணனறது; நான் என் கணவரின் தனியறைக்குப் போனேன். அவர் பத்திரிகை படித்துக் கொண்டிருந்தார். நான் வந்ததை அவர் அறிவார்; அறிந்தார். என்ன அவர் முகங்கொடுத்துப் பார்க்கக்கூட இல்லை. எனக்கு நாத் துடித்தது.