பக்கம்:தாய்வீட்டுச் சீர் (சிறுகதை).pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 "...உங்களை ஒன்று கேட்க வேண்டுமென்று ரொம்ப நாளாக யோசித்துக் கொண்டிருந்தேன். உங்களிடம் ஏதோ ஒரு பெரிய மாறுதலை நான் இப்போதெல்லாம் காணுகிறேன். ஏன் அப்படி?’ என்றேன் துயரம் சுருதி சேர்ந்த குரலில். "...நானும் உன்னிடம் சொல்ல வேண்டுமென்றுதான் இருந்தேன். நீ முந்திவிட்டாய். நான் விரைவில் வேருெரு கலியாணம் பண்ணிக் கொள்ளப் போகிறேன்...” என்று ஒரு பெரிய இடியை என் தலையில் அலக்காகத் தூக்கிப் போட் டார். செந்தழலில் நான் வெந்தேன்; இறவாமல் இறந்து கொண்டிருந்தேன். வேருெரு திருமணம் செய்து கொள்ளப் போகிறீர் களா? நான் உயிருடன் இருக்கும்போதா? என் உயிர் உட வில் இருக்குமட்டும் மற்ருெருத்திக்கு ஒருநாளும் இந்த மங் களம் உரிமையை விட்டுக் கொடுக்கமாட்டாள் என்பதை மற வாதீர்கள்...' என்று அலறினேன். 'உரிமையா? யார் உரிமை?அது யார் கொடுத்த உரிமை? நீ இனி என்றுமே என் ஆசை மனேவியாகப் பள்ளியறை நாட முடியாது...உன் கண் முன்னலேயே அடுத்த மாசம் நான் வேருெரு திருமணம் செய்து கொள்ளுகிறேன். நன் முகப் பார், என் சபதம் நிறைவேறுவதை' என்று வெறி யுடன் முழங்கினர் அவர். - சபதமா செய்கிறீர்கள்? அப்படி உங்கள் கல்யாணம் நடந்தால், அது என் சாவின் அஸ்திவாரத்தில்தான் நடக்கு மென்கிறதை மட்டும் ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள்." என்று பதில் சபதம் போட்டுவிட்டு நான் ஓடி வந்து படுக் கையில் விழுந்து இரவெல்லாம் அழுதுதிர்த்தேன். இப்படிப் பட்ட இரவுகளுக்கு என் வரை கணக்கேது: பட்டணத்தில் என் கணவரின் முறைப்ப்ெண் ஒருத்தி. இருக்கிருளாம். ஆரம்பத்தில் அவளைத்தான் மண்ப்பதாக இருந்ததாம். ஆனல் அந்தப் பெண்னைவிட என் அழகுத்ான்