பக்கம்:தாய்வீட்டுச் சீர் (சிறுகதை).pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

89 அன்று என்னிடம் அவர் அப்படித் தஞ்சமடையச் செய்தது! ஆனால், இன்ருே. . அவர் அந்தப் பட்டணத்துப் பெண்ணேக் குறிவைத்து, மணம் முடிக்கத்தான் நேற்றுப் பட்டணம் போயிருக்கிருர் போலும்! அவர் சபதம், ஐயோ...! ஆனல் நான்...என் உரிமை...!

※ 米

'மங்களம், நிஜமாகவே உனக்கு நான் ரொம்பவும் கடமைப்பட்டிருக்கிறேன். உன்னை மனைவியாக அடைய நான் பூர்வ ஜென்மத்தில் மிகவும் புண்ணியம் செய்திருக்க வேணும். ..!’ ஓர் நாள், உணர்ச்சிக் குமிழ் பறிக்க என் கணவர் கூறிய வார்த்தைகள் இவை என்பதை நான் எப்படி மறப்பேன்? அன்று என் கணவர் படுத்த படுக்கையாகிப் போளுர்: மரணப்படுக்கையில் அவரின் உயிர்க்கூடு ஊசலாடியது. அவர் நிலை எனக்குப் பயத்தை ஊட்டியது. அழுதேன் மாளாமல்: புலம்பினேன் விடாமல். அம்பிகையின் முன் என் மாங்கல் யத்தை வைத்துப் பூஜை பண்ணித் தீபங் காட்டினேன்: தெய்வத்தை வேண்டிக் கொண்டேன்; காணிக்கை பிரார்த்தித்தேன். . இரவு காலங் கடந்துங்கூட, அவரின் தலைமாட்டில் உட் கார்ந்து, அவரது நெற்றியைத் தடவிவிட்டுக் கொண்டிருந் தேன். அவர் அப்பொழுது சற்றே கண்ணயர்ந்தார். எனக் கும் தூக்கம் சொக்கியது. தூங்கிப்போனேன். துரக்கத்தில் நான், ‘தெய்வமே, என் மீது கருணை வை, எனக்குத் தாலி பாக்கியத்தை அருள் செய்; என் கணவரின் உடலைச் சீராக்கு தாயே. இல்லையென்ருல். பூவும் மஞ்சளுமாய் முதலில் என்னை உன்னிடம் கூட்டிக்கொள்..என் புருஷன் இல்லை யென்ருல் என் வாழ்வும் இல்லை. கடவுளே’ என்று பலவாறு அரற்றிக்கொண்டிருந்தேளும். என்னை எழுப்பிய என்னவர் நான் கூறியதை அப்படியே என்னிடம் ஒப்புவித்ததைக் கேட்கவே, எனக்குப் புல்லரித்தது.