பக்கம்:தாய்வீட்டுச் சீர் (சிறுகதை).pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

91 வாய்த்த கணவனின் கடைசி ஆசையைப் பூர்த்தி செய்யவேண்டி, வாய்த்த மனைவியே அவனைத் தான் விரும் பியதாசி வீட்டுக்கு இட்டுச் சென்ற நளாயினி கதை அதில் இருந்தது. கதையை எண்ணினேன்; என் கதையையும் எண்ணி னேன். அன்று, என் உயிருள்ளமட்டும் என் உரிமையை விட்டுக் கொடுக்க முடியாதென்று அவரிடம் செய்த சபதம் என்னை இப்போது கேலி பண்ணியது. கொண்ட பதியின் இன்பமே தன் இன்பம் என்று கருதிய அந்தப் பெண் தெய்வம் நளாயினியின் கதை என் மனத்தை அரித்தது; சித்திரவதை செய்தது. அந்த நளாயனி மாதிரி நானும் ஓர் பெண் தெய்வமாக ஏன் ஆகக் கூடாது...? மின்னல்; முடிவு! என் மனச்சாட்சியின் வேதனை, என் முடி வில் நிம்மதி கண்டதோ? 'கமலா, கமலா!' 'அக்கா' 'கமலா, இன்றைக்கு ராத்திரி மெயிலுக்கு நான் மெட்ராஸ் போகவேண்டும். என் புருஷனிடம் போய் என் தவறுக்கு மன்னிப்பு வேண்டி, நானே முன் நின்று அவர் விரும்பும் பெண்ணுடன் அவர் கலியாணத்தை முடித்து வைக்கப் போகிறேன். கமலா, ஆச்சரியப்படுகிருயா? என்னிடம் இனி அவர் என்ன இன்பத்தை எதிர் பார்க்க முடியும் என்று சிந்தித்துப் பார். உனக்கு என் இந்த மாற்றத்தின் காரணம் பதில் கூறும், .' என்றேன். ‘பூம்...பூம்' வாசலில் டாக்ஸி ஒன்று ஹார்ன் கொடுத்து நின்றது: அடுத்த கணம் நான் என் கண்முன் கண்ட காட்சி...! * ஐயோ!' என்று அலறினேன்.