பக்கம்:தாய்வீட்டுச் சீர் (சிறுகதை).pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

93 என் உயிர்த் துணைவரை தோளுடன் அணைத்துத் தாங்கிய வாறு டிரைவர் மெல்லப் படுக்கையில் படுக்கவைத்தார். அவரையே இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்த என் இமைகளில் கண்ணிர்க்குளம் சுரந்து வழிந்தது. அவர் கண்ணைத் திறக்க அரைமணியானது. அப்பொழுது தான் எனக்கு நல்ல மூச்சு வந்தது: உயிர் மீண்டது. ஒடிப் போய் என் தாலியை விளக்கொளியில் புன்னகைத்த தேவி யின் முன் வைத்துக் கும்பிட்டுக் கண்களில் ஒத்திக்கொண்டு, கணவரிடம் ஒடினேன். 'மங்களம்...!’’ 'உடம்பை அலட்டிக்கொள்ளாதீர்கள். நான் இன்று கமலாவுடன் உங்களைப் பார்க்கப் பட்டணம் புறப்பட விருந் தேன். நானே இருந்து உங்களுடைய திருமணத்தை நடத் தத்தான் புறப்பட்டேன். ஆணுல் இப்படி உங்களை உடம் பெல்லாம் காயக் கட்டுகளுடன் காண்பேன் என்று கனவில் கூட எண்ணவில்லை நான்...” என்று விக்கலுக்கும் விம்ம லுக்குமிடையே கூறினேன். 'மங்களம், நீ என் தேடிவந்த தெய்வம். முன் ஒரு நாள் நான் சாகக் கிடந்தபோது, உன் தாலிப் பலம் தான் என்னைக் காப்பாற்றியது. இன்றும் அப்படித்தான். உன் தாலிதான் என் உயிரை உன்னிடம் மீட்டுச் சேர்த்தது, இல்லையென்ருல் நான் கார் விபத்தில் இந்நேரம் செத்திருப் பேன். விபத்தில் அகப்பட்டு அடிபட்ட என்ன ஆஸ்பத் திரியில் சேர்த்து இரண்டு மணி நேரம் கழிந்துதான் எனக்கு நினைவு வந்தது. அங்கு வந்த வயதான கிழவி ஒருத்தி என் நிலைக்கு இரங்கி பாவம், எந்தப் புண்ணியவதியின் தாவி மகிமையோ பையன் இந்தமட்டும் தப்பிச்சிருக்கிருன். தலைக்கு வந்தது தலைப்பாகையோடே போயிட்டுது...” என்று உணர்ந்து சொன்ன சொற்கள் என் கண்களைத் திறந்துவிட்டன. மங்களம், என் குற்றத்துக்குத் தண்டனை அடைந்துவிட்டேன். இல்லையென்ருல், பெண் பார்க்கப் போன வழியில் இப்படி விபத்து நேர்ந்திருக்குமா? மங்களம்