பக்கம்:தாய்வீட்டுச் சீர் (சிறுகதை).pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

93 என்னே மன்னித்துவிடு. கடந்த நாட்கள் கண்ணிருடன் கழியட்டும். அடுத்த வாரம் உன்னைப் பட்டணம் கூட்டிப் போகப் போகிறேன், உன்னைப் பழைய என் மங்கள்மாக்க, என் டாக்டர் நண்பர் ஒருவர் உறுதி சொல்வியிருக் கிரு.ர். . . . அவர்-என் கணவர் என் தலைமயிரை அன்புடன் கோதி விட்டார். இந்த இன்ப ஸ்பரிசம் என் மீது பட்டு எவ்வளவு புகங்களாகிவிட்டன! முழு உரிமை பூசிய கண்களுடன் என் கணவரை. ஆம்! என் கணவரை ஆனந்தத்துடன் ஆழ்ந்து பார்த்தேன். என் கண்களில் கண்ணிர்; அவர் கண்களில் கண்ணிர். என்னையே நான் மறந்தேன். அப்பொழுது தபால்' என்ற ஒலி கேட்டது; ஒடினேன். தபால் ஒன்று வந்தது; அது என் துணைவருக்கு. பிரிக்கச் சொன்னர்; படித்தேன். சேகர் அத்தான் அவர்களுக்கு நீங்கள் என்ன இரண்டாந்தாரமாக மணந்துகொள்ள, என் அப்பாவிடம் பெற்றுவிட்ட உரிமையை அறிந்தேன். உங்களே அடைய நாளெல்லாம் கனவு கண்ட சமயம் ஒன்று இருந்தது மெய். ஆனல் அவ்வுரிமை அன்றே மங்களம் அக்காளுக்குச் சார்ந்ததாகிவிட்டதே. .! ஒரு பெண்ணின் கண்ணிர்த்தளத்தில் வாழ்வைத் தொடங்க எந்த இதயமுள்ள இன்னொரு பெண் இதயமும் சம்மதிக்காது. இன்னொருத்தி வின் கூந்தலிலிருந்த பூவை ஒரு பெண் தன் தலையில் சுமந்து கொள்ள விரும்பமாட்டாள்; அதில் பூர்ண மலர்ச்சியும், மணமும் இராது. அப்பாவின் உரிமை இனி உங்கள் வரை செல்லுபடியாகாது. என் மீது உங்களுக்கு உண்மை அன் பிருந்தால், தயவு செய்து அந்த அன்பு பூராவையும் மங்களம் அக்காளுக்கு அளித்து, அவளுக்கு மறுபிறவி அருளுங்கள். கைப்பிடித்த கணவராகிய உங்கள் கடமை அது. நீங்கள் அவளுக்கு அன்று தெய்வ சாட்சியாகப் பூட்டிய தாலியின் ஆணை அது. அவளது உரிமை அது இப்படிக்கு, லலிதா.” நான் ஏந்தி நின்ற என் தாலியின் மீது எங்கள் இருவரின் ஆனந்தக் கண்ணிரை அன்புக் காணிக்கையாகச் சமர்ப்பித் துக்கொண்டிருந்தோம்!