பக்கம்:தாய்வீட்டுச் சீர் (சிறுகதை).pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

95 'அப்படியா? மகிழ்வு. நல்ல சகுனந்தான்!” என் பேரில் இவ்வள்வு அன்பும் அக்கறையும் கொண்டி ருக்கும் உங்களை நான் பதியாகப் பெறுவதென்ருல், பூர்வ. ஜென்மத்தில் நான் மிகவும் பாக்கியம் செய்திருக்க வேண் டும், அத்தான்!” ‘'நீ சொல்வது மெய்யென்ருல், அந்தப் பாக்கியத்துக்கு உரிமை கோர எனக்கும் அதிர்ஷ்டம் எ ன் று தானே பொருள்?” 'என்னை வெகுவாக உயர்த்திப் பேசுகிறீர்கள்!” "நான் உன்னை உயர்த்திப் பேச வேண்டியதில்லை. நீயே உன் எழில் மூலம் உயர்ந்து விட்டாய். உன்னுடைய தூய அழகும் துல்லியமான நேசமும் எழில் விளங்கும் துணிவுமே என்னை உன்பால் மனம் இழக்கச் செய்து விட்டன!” 'பாலும் பழமும் சாப்பிடுங்கள், அத்தான்!” 'இந்த இரட்டை வடச் சங்கிலி உன் மேனிக்கு எத்தனை அந்தமாக இருக்கிறது?. ..ஆஹா. ..!” 'அ. ..த்தான்!” '. ..கயற் கண். ..ணி!” 'அ. ..த். . . . ...' 米 冰 求 家 “சற்றே பொறுங்கள்; உங்கள் ஷர்ட் காலரைச் சரி பண்ணி விடுகிறேன், அத்தான்!' 'ஒகோ!' 'இந்தாருங்கள், டி.பன்!' நான்தான் இப்போது மூச்சுப் பிடிக்கச் சாப்பிட்டு விட்டேனே!! : - 'அது மத்தியானத்துக்காக்கும்!'