பக்கம்:தாய்வீட்டுச் சீர் (சிறுகதை).pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 'இன்று கிழமை என்ன?” வியாழன்' “தேதி. ..?”

இருபத்தாறு!. ...”

'மாதம்...?”

  • g:లిడి)..!' “இன்று உங்களது பிறந்த நாள் ஆயிற்றே?” 'நினைவு பெற்றுவிட்டேன், கண்ணே!'

'நீங்கள் எனக்கு எவ்வளவு பரிசுகள் வாங்கிக் கொடுத் திருக்கிறீர்கள், நான் உங்கள் உடமையான இந்த ஒரு வருஷ காலத்திலே!...அதேபோல, நானும் உங்களுக்குப் பிறந்த நாள் பரிசு ஒன்று வாங்கித்தரப் போகிறேன். இன்று மாலை நீங்கள் ஆபீஸ் சென்று திரும்பியவுடன், என் பரிசு உங்களுக் கெனக் காத்திருக்கும். அத்தான்!...” 'அப்படியென்ருல், என் பிறந்த நாளின் நினைவால் நானும் உனக்கு ஒரு பரிசில் தருவேன்!" நீங்கள் தந்துள்ள இந்த அன்பெனும் வாழ்வுப் பரிசில் ஒன்று போதுமே, அத்தான்!” பேஷ்!...பேஷ் இந்தப் பரிசிலையும் நீவாங்கிக் கொள் வளத்தான் வேண்டும். அந்தி மாலைப் பொழுது வரட்டுமே, பார்க்கலாம்!' 'உங்கள் இஷ்டம்!” 'அங்கயற்கண், காது லோலாக்குகள் எங்கே? "குளிக்கும்போது திருகாணிகள் தளதளவென்றிருந் தன. கழற்றி வைத்திருக்கிறேன். சற்றுப் பொறுத்துப் போட்டுக் கொள்வேன், அத்தான்!”