பக்கம்:தாய்வீட்டுச் சீர் (சிறுகதை).pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100

  1. x

"நமஸ்தே, அம்மா!... வாருங்கள், சேட்!” *வணக்கம், ஐயா!' 'வாருங்கள்...வாருங்கள்!” 'அம்மா, இந்த டோலக்குகள் இரண்டும் உன்னுடை யது. மறந்திருக்க முடியாது. ஒன்று நீ அடகு வைத்தது. உன் புருஷனுக்குப் பிறந்த நாள் பரிசு வாங்கவே இப்படிச் செய்தாய். உன்னுடைய இரண்டாவது லோலக்கை உன் கணவர் என்னிடம் வைத்தார். நீ ஆஸ்பத்திரியிலிருந்து திரும்புவதற்குள்ளே இதைத் திருப்பிக் கொண்டுவிடலா மென்கிற எண்ணம். உனக்கு ஒரு பதில் பரிசு கொடுக்கவே. இந்தத் திட்டம். உன்னுடைய அன்டே உங்கள் இருவரை யும் மீறிய நிலையில் பாகப் பிரிவினை பெற்று, இருவேறு கால் வாய்களாக ஓடி, இப்போது சங்கமமாகியிருக்கிறது.” "நான் மொழியாலும், இனத்தாலும் பிறந்த நாட்டா லும் தமிழர்களாகிய உங்களிலிருந்து பிரிந்து, அந்நியமாகத் தோன்றிலுைம், பாசத்துக்கோ-மனிதத் தன்மைக்கோ எவ்விதமான வித்தியாசமும் கற்பிப்பதற்கில்லே! எனக்கும். பிள்ளைகுட்டி உண்டு. பாசத்தைப் பற்றிப் புரியும்; தமிழ்ப். பண்பையும் அறிந்திருப்பவன்!...புருஷன்-பெண்சாதியாகிய உங்களுடைய தனித்தனி மனசையும் நான் ரொம்பவும்: புரிந்து கொண்டேன். உங்களுக்கு நான் தந்த பணத்துக்கு. ஈடு வேண்டாம். அன்புக்கு ஈடு கிடைக்குமோ?...மிஸ்டர் சோமசுந்தர்!...உங்கள் தேவைக்கு மிஞ்சிப் பணம் இருக்கை வில், கொண்டு வாருங்கள். நான் இப்போது வியாபாரியாக வரவில்லை. இதுவே என் ஆறுதலை உயிர் வாழ வைக்கக் கூடியது!..."