பக்கம்:தாய்வீட்டுச் சீர் (சிறுகதை).pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நலல மூசசு 'துரத்துக்குடி எக்ஸ்பிரஸ் காற்ருகப் பறந்துகொண் டிருந்தது; அதைவிட இன்னும் வேகமாகப் பறந்துகொண் டிருந்தது ராமசேகரனின் நெஞ்சம்: சென்னையிலிருந்து அறந்தாங்கியில் அப்படியே தொபுகடீர்’ என்று குதித்துவிட ஆசைப்பட்டான். ஆனல் இன்னும் அவன் ரயிலில்தான் பறந்து கொண்டிருக்க வேண்டி வந்தது. பெரிய ஸ்டேஷன் ஒன்றில் ரயில் நின்றது. அவன் கண்களே. நித்திரையிலிருந்து எழுவது போலப் படக் கென்று திறந் தான். பார்வை தெரியவில்லை. கண்ணிர் வெள்ளம் மறைத்தது. டவலே எடுத்துத் துடைக்கப் போனன்; டவல் தெப்பமாக நனைந்தது. கம்பார்ட்மெண்ட் கதவண்டை சென்ருன். 'ஸார் கொஞ்சம் வழி” என்ற குரல் அவனை நகர வைத்தது. யாரோ ஓர் இளைஞன் பூட்ஸ் சத்தம் கணி ரென்று ஒலிக்கக் கீழே குதித்தான். அவன் மனம் அதிர்ந்தது. 'பாலு. .”. " அப்பா...' 'இப்படி இனி நீ குதிக்கப்படாது...தெரிஞ்சுதா. .” 'ஆகட்டும். நீங்கள் அப்படி இருங்கள். உங்களுக்குக் காபி வாங்கிவறேன்...” டேய். அத்தோடு உன் பெண்டாட்டியை மறந் துடாதே...ஜானகிக்கும் சேர்த்து வாங்கிண்டு வந்துடு...' 7