பக்கம்:தாய்வீட்டுச் சீர் (சிறுகதை).pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

103 பெஞ்சியில் அமர்ந்திருந்த கிழவர், அந்த இளைஞன், அவன் மனைவி மூவருமாகக் காபி சாப்பிட்ட மகிழ்ச்சியுடன் வெற்றிலை போட்டுக் கொண்டிருந்தார்கள். ரயில் புறப்பட்டது. செங்கல்பட்டு ஸ்டேஷன் கண் னுக்குத் தள்ளி ஒதுங்கி விட்டது. பெட்டியின் வழிக் கதவைச் சாத்திவிட்டு, அதன் மீது சாய்ந்து கொண்டிருந் தான் ராமசேகரன். வெளியே காய்ந்த நிலவில்-வீசிய தென்றலில் கூட அவனுக்கிருந்த நெஞ்சின் பளுவும் தலைக் கனமும் ரவை கூடக் குறையக் காணுேம். பெஞ்சியை ஒட்டியிருந்த பலகை இடுக்கில் அவன் பார்வைக்குச் சரியாக அந்தக் கிழவரின் உருவம் பளிச்சென்று தெரிந்தது. அவனுக்கு மறுபடியும் அழுகையும் ஆத்திரமும் முட்டிக் கொண்டு வந்தன. அப்பா என்ருன் தன்னை மறந்து. அவன் அப்பா தோன்றினர். அவனுக்கு நெஞ்சு நடுங்கியது. சட்டைப் பையிலிருந்த அந்தக் கார்டைப் பிரித்தெடுத் தான். தந்தையின் உடல் நலம் மிகவும் பாதிக்கப்பட்டிருப்ப தாகவும் உடனே வருமாறும் அந்தக் கடிதத்தில் கண் டிருந்தது. இமயமலையே தலையில் சுமத்திவிட்டாற் போலிருந்தது அவனுக்கு. டவலில்ை முகத்தைத் துடைத்துக்கொண் டான். விடு விடு என்று நடந்து மேலே பெர்த்தில் துண்டை விரித்துப் போட்டான். மூன்ருமவர் தன் முகத் தைப் பார்க்காத அளவுக்கு முகத்தை ஒருக்களித்துக் கொண்டு படுத்துக் கொண்டான். அவ்வளவுதான்; உறக்கம் கொள்ளவில்லை. எப்படி முடியும்? அடுத்த நாள் ராமசேகரன் தந்தையைப் பார்த்த போதுதான் நல்ல உயிரும் நல்ல மூச்சும் வந்தது!

  • ※ ※ 岑

வந்திட்டியா ராஜா” "எப்படி அப்பா இருக்கு உடம்புக்கு...'