பக்கம்:தாய்வீட்டுச் சீர் (சிறுகதை).pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

103 'உன்னைப் பார்த்ததும் பரா சொஸ்தப்பட்டாப்பிவே இருக்குது, ராமு .” "அப்பா. .” 'தம்பி. .” ராமலிங்கம் சிறு குழந்தை போல விசித்து விசித்து அழு தார்; அவர் கை விரல்கள் மகனின் முகத்திலும் நெற்றி யிலும் இழையோடிக் கிடந்தன. அவற்றில் கண்ணிர் கண்டது. 'ராமு, நீ அழுதியா...?” "...ஊஹாம், இல்லை...இல்லை...' 'பொய் சொல்றே...! நீ எனக்குப் பிள்ளையாகப் பிறந்த கேட்டுக்கு உனக்கு நான் இந்த ஐயாயிரம் ரூபாய் கடனை வைத்துவிட்டுப் போகப்போறேனேன்னு நீ அப்படி நெஞ்சு குமுறி அழுகிறியா?. சொத்து பத்து அம்மன் சல்வி வேணும்; கடன் கப்பியாச்சும் வைக்காமப் போகப்படாதா நம் அப்பன்’னு நீ ஆத்திரப்படுறியா?...மெய்தான்...! தம்பி...உன் தலைமேல்ே கடனைச் சுமத்திப்பிட்டுத் திடுதிப் பின்னு இந்தப் படுபாவி கண்ணே மூடப் போறேனேன்னு நானே மனசாலே எண்ணுறப்போ, இப்பவே மூச்சு நின்னுடும் போலிருக்குது...இந்தக் கண்டத்திலிருந்து உன்னைக் காப் பாற்ற வழிதான் ஒண்னும் புலப்படல்லே...ராமு...என்ன நீ மன்னிப்பியா?” . ராமலிங்கம் ஒவ்வொரு வார்த்தையாகப் பேசினர்; ஒவ் வொரு சொல்லுக்கும் ஒரு முறை இருமிஞர்; வார்த்தைக்கு வார்த்தை துளித்துளிக் கண்ணிர் விட்டார்: . ஐயோ அப்பா. பேசாதீர்கள் உடம்பை அலட்டிக்கக் கூடாது. .சாயந்திரம் டாக்டரை அழைச்சிட்டு வாரேன்... இனியும் நீங்க வாயைத் திறந்தா, அப்புறம் உங்களுக்கு முன்னடி நான்தான் வாயைப்பிளக்கவேண்டி வந்திடும்... அப்யா! உங்களுக்கு நான் மகனுகப் பிறந்த் புண்ணியத்திலே