பக்கம்:தாய்வீட்டுச் சீர் (சிறுகதை).pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 தானே இந்த மட்டும் நானும் ஒரு மனிதனுக ஆகியிருக் கேன். .உங்கள் உயிரைக் கொடுத்து, என் உயிரை நிலைக்க வைத்தீர்கள். உங்கள் பெற்ற பாசத்துக்கு அடையாளமாக அம்மா உங்கள் கிட்டே உறுதிமொழி வாங்கிக் கொண்ட துக்கு அத்தாட்சியாக என்னை நீங்கள் மணக்கோலத்தில் நிறுத்தினர்கள்...பி. ஏ. பட்டம் உங்களால்தான் அப்பா வந் தது. .இல்லையென்ருல் இந்த உத்தியோகம் எங்கிருந்து கிடைக்கும்?...இத்தனை பாக்கியமும் உங்களால்தானே அப்பா என்னைத் தேடி வந்தன?. .என் நிமித்தம் நீங்கள் பட்ட கடனுக்கு, ஒரு விதத்தில் நானேதான் அப்பா பொறுப்புடையவனாக ஆகிறேன்...அப்பா...கடன் கடன் என்று நீங்கள் கவலைப்படாதீர்கள். உங்கள் மனசு குளிரும் படி, நானும் என் கடமையைச் செய்து முடிக்க கடன் பூரா வையும் சீக்கிரம் அடைத்துவிடுகிறேன்...அப்பா, என்னிடம் உழைப்பு இருக்கிறது...பட்டணத்தல் பெரிய பணக்கார நண்பருடன் சேர்ந்து பிஸினஸ் செய்யத் திட்டம்...எண்ணி ஆறு மாசத்துக்குள் கடனேக் கட்டிப்பிடலாம்...நாம் யாருக் கும் எந்தக் கெடுதலும் பண்ணவில்லை. தெய்வம் கருணை செய்வார் அப்பா...' என்ருன் ராமசேகரன் விம்மலுக்கும். விக்கலுக்கு மிடையில். மகனின் முகத்தில் பிரதிபலித்திருந்த உறுதி தந்தைக்கு ஆறுதல் சொன்னது போலும்!...கணப்பொழுது நிம்மதி: யாக இருந்தார். பதுமையாக உட்கார்ந்திருந்தான் ராமசேகரன். "அத்தான்.” அத்தானுக்கு உரியவள் வந்தாள் பட்டணத்தில் குடி யும் குடித்தனமுமாகத் தம்பதிகள் இருந்தார்கள்: ஒரு வருஷம் கணக்காவதற்குள். மைதிலிக்கு டைபாய்ட் ஜூரம் வந்துவிட்டது. சேதி கேட்டு அவன் அப்பா ஒடோடி வந்து உாக்ஸியில் "ஊருக்கே அழைத்துச் சென்று விட்டார். ..பட்டணமான என்ன? லண்டனை எனக்கென்ன? என் கன்னுக்கு நேரே வைத்தியம் நடந்தால்தான் என்மனசுக்கு.