பக்கம்:தாய்வீட்டுச் சீர் (சிறுகதை).pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

105 திம்மதி...' என்று சொல்லிவிட்டார் மகனிடம். உடம்பு குணமானது; ஒய்விலிருந்தாள். இப்போது வயதான காலத் தில் தன் தந்தைக்குத் தன் மனைவியின் பணிவிடை பலனளிக்குமே என்று வீட்டோடு விட்டுவைத்திருந்தான் ராமசேகரன். அத்தான், பிரயாணக் கோலத்தைக்கூட இன்னும் மாற்றவில்லையே...மாமாவை நான் கவனிக்கமாட்டேனு? தீங்கள் போய்க் குளியுங்கள். வெந்நீர் இறக்கி வச்சிருக் கேன்...”* 'மைதிவி, அப்பாவுக்கு வேளை மருந்தைக் கலக்கிக் கொடு; ஆகாரத்தையும் கொடு. நான் போய் டாக்டரை அழைத்து வருகிறேன். அப்புறம் உன் உத்தரவுப்படியெல் லாம்...' என்ருன். ஆனல் அவனிடம் வழக்கமாகக் காணப்படும் இரண்டு கைவிரல் மோதிரங்கள் ஐந்தும், மைனர் சங்கிலியும் காணப் படவில்லை. அதற்குப் பதிலாகப் பத்து ரூபாய் நோட்டுக் கட்டுகள் இருந்தன. டாக்டர் வந்து போனர். இஞ்செக்ஷன் ட்யூப்களும் மருந்து பாட்டில்களும் வந்து போயின. ராமலிங்கம் நினைவு மீண்டிருக்கும் போதெல்லாம், தம்பி..தம்பி. .' என்று மகனை வாய் ஓயாமல் அழைத் தார்; மருமகளையும் கூப்பிட்டார். இருவரையும் ஜோடி வியாக ஒரு நிமிஷம் பார்த்துக் கொண்டே யிருப்பார்; உடனே அவருக்குக் கண்ணிர் குழகுழக்கும். சென்னையிலிருந்து திரும்புகையில், அவன் ரயிலில் கண்ட அந்தக் கிழவரை எண்ணிக்கொள்வான் அவர் மகனுக்கு அன்புடன் கட்டளை யிட்ட விவரங்களை நினைத்தபோது, அவருடன் தன் தகப்பளுரையும் ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்வான். ※ ※ ※ ::