பக்கம்:தாய்வீட்டுச் சீர் (சிறுகதை).pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10? என் எதிர் காலம் உங்கள் அன்பில், பெருந்தன்மையில் ஊசலாடுவதாகச் சொல்லியிருக்கிறேன். சோதனை வந்து விட்டது இப்போது. என் தந்தை, தான் பட்ட ஐயாயிரம் ரூபாய் கடனை என் மீது சுமத்திவிட்டுச் சாக நேரும் போலிருக்கிறதே என்ற வேதனேக் கொந்தளிப்பில் தினமும் ஒவ்வொரு விடிையும் செத்துக்கொண்டிருக்கிரு.ர். அவர் உயிரை நிம்மதியுடன் பிரியச் செய்யாவிட்டால், மகள் என்ற கடமையை விட்டுத் தவறியவளுவேன்...! அவர் மன நிம்மதியுடன் கடைசி மூச்சைவிட மார்க்கம்...? ஆம்; அது உங்கள் கையில் இருக்கிறது. என் பேரில் நம்பிக்கை வைத்து ஐயாயிரம் ரூபாய் அனுப்புவீர்களானல், என் தந்தை உயிருடன் இருக்கும் போதே, நச்சரிக்கும் கடன் காரர்களின் கடனே அடைத்து விடுவேன். அப்பாவுக்கு அப்புறம் கவலையே இல்லை. ஒரு வேளை கடன் தீர்ந்த நிம்மதி யில் பிழைத்து எழுந்தாலும் எழுந்து விடுவார்.ஐயா, என் உயிரை, நாணயத்தைத் தங்கள் பாதத்தில் பணயம் வைத்து உங்கள் பணத்தைக் கட்டிவிடுகிறேன்...! கருணைபுரிவீர் களா?... இப்படிக்கு, ராமசேகர். அன்றைக்குராமசேகரன் தன் தந்தையின் அறையிலுள்ள பழைய காகிதங்களைப் பிரித்துக்கொண்டிருந்தான். அந்நாளில் பெரிய தொரு ஷாப் வியாபாரம் நடத்திய ஆனந்த மிகுந்த நாட்களுக்கு அவை ஞாபகச் சின்னங்களாகக் கிடந் தன எங்கோ ஓர் இடுக்கில். டைரி ஒன்று சிக்கியது. "என் பால்ய நண்பன் பாலகுருவுக்கு அவனுடைய கrண நிலையைச் செம்மையாக்கவேண்டி நாலாயிரம் ருபாய் கடனுகக் கொடுத்திருக்கிறேன் இன்றைக்கு. என் முதல் பணம் அவன் கைக்கு மாறும் வேளையாகிலும் அவனுக்கு