பக்கம்:தாய்வீட்டுச் சீர் (சிறுகதை).pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 விடிவைக் காட்டவேண்டும். தில்லைவாசி தான் கருணை செய்யவேண்டும். அவனுக்குக் கடன் கொடுத்ததற்குப் பிராமிஸ்ரி நோட்டு எதுவும் இல்லை. தங்கக் கம்பியாயிற்றே என் சிநேகிதன் பாலகுரு...' குறிப்புடன் அப்பாவிடம் ஒடினன்; செய்தி பற்றி விள்க்கம் கோரின்ை. - 'சேகர், அது எல்லாம் இப்போது பழங்கனவு.! என் நண்பன் பாலகுரு தொழில் தொடங்கிய மூன்ரும் மாசமே இறந்து போனன். அவனுடைய மகன் இப்போது தொழில் செய்கிருளும்; நல்ல பணக்காரகைக் கூட ஆகிவிட்டானம். நாம் இப்போது யார்ைப் பார்த்து எப்படி நம் பணத்தைக் கேட்பது? பாலகுரு கைப்பட்ட ஆதாரச் சீட்டுக் குறிப்புகூட என்னிடம் கிடையாதே; அவன் என்னிடமிருந்து நாலாயிரம் ரூபாய் கடளுகப் பெற்ருன் என்ருல் இப்போது என்னைக் கண்டு தானே எல்லோரும் சிரிப்பார்கள்...” இளைஞனின் ஆசைத்துளிர் தோன்றிய சுவடுடனேயே கருகியது! சற்றுக் கழித்து, யாரோ ஒரு பெரிய மனிதர் வந்தார் பட்ட கடனை வசூலித்துப் போக! தாறு மாருகப் பேசினர். அவரைத் தனியே அழைத்து ஒரு வழியாகச் சமாதானம் சோல்லி அனுப்பிவிட்டான் ராமசேகரன். இரவு அவனுக்கு விடியாத இரவு வேதனைபற்றி எரிந்த விடியாத இரவு!

ஐந்தாம் நாள் இருந்திருந்தாற்போல, ராமலிங்கத் திற்கு உடல் நிலை மோசமாகிக் கவலைக்கிடமாயிருந்தது; பேச்சு மூச்சில்லை. கடன் கொடுத்தவர்கள் நான்கு பேர் களும் திண்ணையை விட்டு நகர்வேயில்லை. ராமசேகரன் தாண்டில் புழுவாகத் துடித்துப் போனன். 'தம்பி, சும்மா நீ எங்களுக்குச் சமாதானம் சொல்லிப் புண்ணியமில்லை. உன் அப்பாரு கண்ணை மூடிட்டா, அப்புறம்