பக்கம்:தாய்வீட்டுச் சீர் (சிறுகதை).pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

109 எங்கள் கடனே நீ நாணயமாய்க்கட்டிடுவாய் என்கிறதற்கு என்ன நம்பிக்கை இருக்குது? இதோ, உன் அப்பாவின் பேருக்குள்ள பிராமிஸ்ரி நோட்டுக்களை உன் பேருக்கு மாற்றி யிருக்கிறது...ஜாமீனுக்கு ஓர் ஆளைக் கொண்டு வந்து நீ எல்லாவற்றிலும் கையெழுத்துப் போடு...அப்புறம் கோர்ட் இருக்கவே இருக்குது...ம்...” 'ஐயா, தயவு செஞ்சு அப்பாவின் காதுக்குக் கேட்கா மலாவது பேசக்கூடாதா?...இதோ உங்கள் இஷ்டப்படியே நான் கையெழுத்துப் போடுகிறேன்...அப்பாவின் கடனை அடைத்தால்தான் நான் நிம்மதியாகத் துரங்குவேன்; அப்போது தான் நான் நல்ல மூச்சு விடுவேன் என்பதை மாத்திரம் நீங்கள் நினைத்துக் கொள்ளுங்கள்...ஆமாம்!” என்று குரல். குழம்ப, ராமசேகரன் சொல்லிக்கொண்டிருந் தான். அந்தச் சமயம் வாசலில் ஒலித்த கார் சத்தத்துடன், "லார்’ என்ற அழைப்பு வந்தது வந்த நபருடன் தந்தையை நாடிச் சென்ருன் ராமசேகரன். 'ஐயா, நமஸ்காரம். என்னை உங்களுக்குத் தெரிய தியாயமில்லை; நான்தான் உங்களுடைய நண்பர் பாலகுரு வின் மகன். முன் நாளில் உங்களிடம் என் அப்பா கடகைப் பெற்ற நாலாயிரம் ரூபாய் விஷயம் நேற்றுத்தான் எனக்குத் தெரியும். த்ங்கள் பணம் வந்த வேளை தான் இன்று நான் ஒரு லக்ஷாதிபதியாக இருக்கிறேன்...இதோ தங்கள் அன்புக்கு என் எளிமையான அன்பளிப்பாக ஐயாயிரம் ரூபாய்க்கு "செக் தருகிறேன். பெற்றுக் கொண்டு, என்ன ஆசீர்வதி யுங்கள்...' என்று வந்தவர் மண்டியிட்டு வணங்கினர். வைர மோதிரங்கள் ஒளிவீசின. ராமலிங்கத்தின் கண்களில் கண்ணிர் வழிந்தது. கையி லிருந்த ஐயாயிரம் ரூபாய் செக்’கில் நீர் மணிகள் உதிர்த் தன. 'தம்பி உனக்கு ஆண்டவன் தீர்க்காயுசையும் நிரம் பச் செல்வத்தையும் கொடுக்கப் பிரார்த்திக்கிறேன். நல்ல சமயத்தில் எனக்கு நீ உதவி செய்தாய். ராமசேகர்,