பக்கம்:தாய்வீட்டுச் சீர் (சிறுகதை).pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110 நாளையே என் கடனப் பூராவும் தீர்த்துவிட ஏற்பாடு செய்...ஆகா...தம்பி, இனி நான் நிம்மதியாகச் சாகிறேன். . கடவுளே...எனக்குச் சாகும் போதாவது நிம்மதி தந்தாய்... நான் பட்ட கடன் என் மூச்சுள்ள போதே தீருவது என் அதிர்ஷ்டம்தான்...' என்று உணர்ச்சிவசப்பட்டுப் பேசினர், புத்துணர்ச்சி அவர் உடலில் பரவியது. ராமசேகரன் வெளியே வந்தான். கடன்காரர்களிடம் திரும்பி,விஷயத்தை விளக்கினன். மறுநாள் வந்து பணத்தைப் பெற்றுப் போகும்படி சொன்னன்; அவர்கள் பிரிந்தார்கள், "அப்பா'என்று கூப்பிட்டுக்கொண்டே ஓடிவந்தான் ராம சேகரன், வந்திருந்த நண்பரை வழியனுப்பி வைத்துவிட்டு: அவன் அப்பா அப்பொழுது நிம்மதியான நீண்ட நித்திரை வசப்பட்டுக் கிடந்தார்...! "ஐயோ, அப்பா!' என்று மகன் போட்ட கூக்குரல் ஓய, பத்து நாட்கள் பிடித்தன. ராமசேகரன் வீட்டில் கடன் கொடுத்தவர்கள் க்யூ’ வரிசையில் நின்ருர்கள். "ஐயா! உங்கள் எல்லோருடைய மன்னிப்பையும் வேண்டுகிறேன். தவருக எண்ணுதிர்கள்...அப்பாவின் பழைய கடனுக்கு ஈடாக ஐயாயிரத்துக்கு செக்' தந்தவர்அந்தச் செக்-எல்லாம் என் நாடகத்தின் விளைவு. சாகும் போது என் தந்தை நிம்மதியுடன் சாகவேனும்; மகனுக்குஎனக்குத் தான் பட்டகடன் சுமையைச் சுமத்தி விட்டுச் சாகப்போவதாக அவர் ஏங்கி விடக்கூடாதே என்பதற்குத் தான் நான் இந்த ஏற்பாட்டைச் செய்தேன். தன் கடன் தன்னுடன் தீர்ந்தது என்ற மகிழ்ச்சியுடன், நிறைவுடன், நிம்மதியுடன் அப்பாவின் ஆவி நிம்மதி பெற்று விட்டது. அவர் கண்ணே மூடிக்கொண்டு விட்டார்...என் போக்கைக் கண்டு நீங்கள் அதிசயப்படுவீர்கள். ஐயா! என் அப்பாவின் பேரில் உங்களுக்கிருந்த நம்பிக்கை என் மீதும் குறையாதிருக் கச் செய்யுங்கள். உண்மை உழைப்பில் நம்பிக்கை உள்ள. வன் நான்! என் தந்தை மீது ஆணையிட்டுச் சொல்கிறேன்... உங்கள் கடனைக் கட்டினல் தான் நான் பிடிசோறு நிம்மதி: