பக்கம்:தாய்வீட்டுச் சீர் (சிறுகதை).pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

111 யாகச் சாப்பிடுவேன்; அப்பொழுது தான் நல்ல மூச்சு விடுவேன்...ஐயா! கூடிய சீக்கிரமே உங்கள் கடனே அடைத்து: விடுகிறேன். .” ராமசேகரனின் கண்ணிர் முழுவதும் வற்றியதும் தான் கண் திறந்தான்; அப்பொழுது அவன் பார்வைக்கென்று. "இன்ஷ்யூர் கவர் ஒன்று காத்திருந்தது. " அன்புள்ள ராமசேகர், உன் கடிதத்தை இன்றுதான் நான் பம்பாயிலிருந்து திரும்பினதும் பார்த்தேன். அத்தோடு மற்றுமொரு விஷ யத்தையும் அறிந்தேன். ஒரு சமயம் என் தந்தை பாலகுரு. முதலியாருக்கு உன் அப்பா நாலாயிரம் ரூபாய் கடன் கொடுத்ததாக என் அப்பாவின் டைரியிலிருந்து அறிந்தேன். என் தந்தையின் திடீர் மரணத்தின் காரணமாக இது பற்றிய விபரம் இது நாள் வரை தெரியாது போய் விட்டது. அப்பா வின் உதவி தான் இன்று நான் ஒரளவு முன்னேறியிருப்பதற். குக் காரணமாகும். மேலும், உன் சோகக் கதை என்னைச் சில வருஷங்களுக்கு முன் இட்டுச் சென்றது. ஏறக்குறைய உன் கதையே தான் அப்போதைய என் நிலையும்! என் தந்தை பட்ட கடனை அந்நாளில் அடைத்து, என் அப்பா நிம்மதியுடன் சாகவேண்டுமென்று நான் பட்ட அல்லல்கள் கடவுளுக்கல்லவா தெரியும்.! உன் தந்தையின் உதவிக்குஅன்புக்கு ஈடாக என் அன்பளிப்பாக-நன்றிக் காணிக்கை யாக ஐயாயிரம் ரூபாய்க்கு இத்துடன் டிராப்ட் அனுப்பி. யிருக்கிறேன். உன் அப்பாவின் கண் முன்னலேயே அவர் பட்ட கடன் பூராவையும் உடனே அடைத்துவிடு. நம் "பிஸினஸ்' வருகிற மாதம் தொடங்கப் பெறுவதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி பெற்றுவிட்டன. உழைப்பு, நாணயம், நேர்மை, தன்னம்பிக்கை எல்லாம் சேமநிதியாக இருக்கையில் தெய்வம் நம்மைக் கைவிட்வே மாட்டாது! அன்புள்ள, பா. சோமநாத் ராமலிங்கம்-ராமசேகரனின் தந்தை நிம்மதியுடன், ஆனந்தமாகச் சிரித்துக்கொண்டிருந்தார்-படத்தில்!