பக்கம்:தாய்வீட்டுச் சீர் (சிறுகதை).pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அலகிலா விளையாட்டு 6 % z e - - - - - - - குபேரன் ஸில்க் எம்போரியம்' அன்றைக்கு அமளி துமளிப் பட்டுக்கொண்டிருந்தது. விடிந்தால், நாடியம்மன் வரகரிசிமாலை! புத்தம் புதிய துணிமணிகள் எடுத்து உடுத்திக் கொண்டுதான் அம்பிகையைத் தொழச் செல்வார்கள் அவ் ஆர்மக்கள். தொன்று தொட்டு வந்த வழக்கமும் இதுவே தான்! ஆகவேதான், அந்தக் கடையில் அவ்வளவு பரபரப்பு! இரவைப் பகலாக்கிக் காட்டிக் கொண்டிருந்தன மின் விளக்குகள். கல்லாப் பெட்டியைப் போலவே நாதமுனியும் விழிப்புப் பெற்றுக் கொண்டுதான் இருந்தான். வாங்கின துணிமணிகளுக்குப் போடப்பட்ட பில் கள் அடுத்தவரால் சரிபார்க்கப்பட்டுப் பிறகு நாதமுனியிடம் அண்டின:ரூபாய்த் தாள்கள் வகை வகையாக மேஜை மீது குவிந்தன. பின்னர் அவை ரொக்கப் பெட்டியில் அடைக்கலம் புகுந்தன. சில் லறை நாணயங்கள் மட்டிலுமே மேஜை மீது வந்தமர்ந்து கொண்டன; சற்றைக் கெல்லாம் அவை திசைமாறி, திக் குத்திரும்பிச் சென்றுகொண்டேயிருந்தன. சுவர்க் கடிகாரம் பத்துத் தவணை ஒலம் பரப்பி ஓய்ந் திது. நாதமுனிக்குக் கொட்டாவிகள் ஒன்றன் பின்னென்ரு ருகப் பரிந்தன, கண்களைக் கசக்கிவிட்டபடி அவன் கருமமே கண்ணுன்ை. அவனது கண்பார்வையில் அவனுடைய அடுத்த தெருவுக்காரர் தென்பட்டார்; உடன் வந்த அந்தப் பெண்மணியையும் அவன் நோக்கினன். என்னுங்க இது: நேரங் கெட்ட நேரத்திலே அண்ணியையும் அழைச்சுக்கிட்டு வந்திருக்கீங்களே?... என்று உரிமை பூண்டு பாசத்துடன் வினவிஞன் நாதமுனி.