பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

218

மக்சீம் கார்க்கி


‘நான் உனக்கு அச்சுக் கோக்கிற வேலை சொல்லித் தருகிறேன். நிகலாய், உனக்கு அது பிடிக்குமா?”

நிகலாய் ஹஹோலிடம் பேசினான்;

“நீ மட்டும் எனக்குக் கற்றுக் கொடுத்துவிட்டால்-உனக்கு நான் என் கத்தியைப் பரிசளித்து விடுகிறேன்” என்றான் அவன்.

“உன் கத்தியைக் கொண்டு - உடைப்பிலே போடு’ என்று கடகடவென்று சிரித்தவாறே கத்தினான் ஹஹோல்.

“இல்லை. அது ஒரு நல்ல கத்தி” என்றான் நிகலாய்.

பாவெலும் சிரிக்க ஆரம்பித்தான்,

“நீங்கள் என்னைப் பார்த்துச் சிரிக்கவா செய்கிறீர்கள்” அறையின் மத்தியில் நின்றவாறே கேட்டான் நிகலாய்.

“ஆமாம் அப்பா, ஆமாம்!” என்று படுக்கையை விட்டுத் துள்ளியெழுந்தவாறே சொன்னான் ஹஹோல். “சரி வா. வயல் வெளிப் பக்கம் உலாவிவிட்டு வரலாம். நிலா அருமையாகக் காய்கிறது. வருகிறாயா?”.

“சரி” என்றான் பாவெல்.

“நானும் வருகிறேன்’ என்றான் நிகலாய். “ஹஹோல், உன் சிரிப்பு எனக்குப் பிடித்திருக்கிறது.”

“நீ பரிசு கொடுப்பதாகச் சொல்வது எனக்குப் பிடித்திருக்கிறது” என்றான் ஹஹோல் சிரித்துக்கொண்டே.

அவன் சமையலறைக்குள் சென்று உடை உடுத்திக்கொண்டான்.

மேலே ஏதாவது போர்வையைப் போட்டுக்கொள்” என்று அவசர அவசரமாகச் சொன்னாள் தாய்.

அவர்கள் மூவரும் வெளியே சென்ற பிறகு அவள் ஜன்னலருகே சென்று அவர்கள் செல்வதையே பார்த்துக்கொண்டிருந்தாள். பிறகு சுவரிலிருந்த விக்ரகத்தை நோக்கி, வாய்க்குள் முணுமுணுத்துக் கொண்டாள்;

“கருணையுள்ள கடவுளே! அவர்களுக்கு நல்லது செய். அவர்களைக் காப்பாற்று....”

26

நாட்கள் வெகு வேகமாகக் கழிந்து சென்றன. அந்த வேகத்தில் மே தினத்தின் வரலைப் பற்றிச் சிந்திப்பதற்குக் கூடத் தாய்க்கு நேரம் கிடைக்கவில்லை. ஆனால் இரவில் மட்டும், பகல் முழுதும் ஓடியாடி, வேலை செய்து ஓய்ந்து களைத்துப் படுக்கையில் சாய்ந்தபிறகு மாத்திரம்,