பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/521

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாய்

505


"இவன் ஒரு நல்ல ஆசாமிதான் போலிருக்கிறது” என்று தன் பெரிய கண்களில் களிப்புக் குமிழிட அவனைப் பார்த்துக்கொண்டே கூறினாள் சாஷா.

இன்று அந்தப் பெண்ணின் முகத்தில் இதுவரையில் இல்லாத மென்மையும் அருமையும் குடியேறியிருப்பதாகத் தாய்க்குத் தோன்றியது.

வீட்டுக்கு வந்தவுடன் அவர்கள் இருவரும் ஒருவர் பக்கம் ஒருவராக ஒரு சோபாவின்மீது நெருங்கி உட்கார்ந்து, அமைதியில் ஓய்வு கொண்டிருந்த தாய் பாவெலிடம் சாஷா செல்லப்போகும் பயணத்தைப்பற்றி மீண்டும் பேசத் தொடங்கினாள். சாஷா தன் புருவங்களை உயர்த்திக் கனவு காணும் அகன்ற கண்களோடு எங்கோ தொலைவில் ஏறிட்டுப் பார்த்தாள். அவளது வெளுத்த முகத்தில் ஏதோ ஒரு அமைதியான சிந்தனையின் சாயை படர்ந்து பிரதிபலித்தது.

“உங்களுக்குக் குழந்தைகள் பிறந்தவுடன் நான் வருவேன். வந்து அந்தக் குழந்தைகளுக்கு செவிலித்தாயாக இருப்பேன். இங்கிருப்பதைவிட, நமது வாழ்க்கை அங்கு ஒன்றும் அவ்வளவு மோசமாக இருந்துவிடப் போவதில்லை. பாவெலுக்கும் வேலை வெட்டி கிடைப்பதில் சிரமமிருக்காது. திறமையுள்ள அவனால் எந்த வேலையையும் செய்யமுடியும்.”

சாஷா தாயையே கூர்ந்து நோக்கினாள்.

“நீங்கள் அவனை இப்போது பின்தொடர்ந்து செல்ல விரும்பவில்லையா?” என்று கேட்டாள்.

“இப்போது என்னால் அவனுக்கு என்ன ஆகப்போகிறது?” என்று பெருமூச்சோடு சொன்னாள் தாய். “அவன் தப்பிவர எண்ணினால் நான் அவனுக்கு ஒரு தொல்லையாயிருப்பேன். அவனோடு நானும் போவதற்கு அவன் ஒரு நாளும் சம்மதிக்கமாட்டான்.”

சாஷா தலையை ஆட்டினாள்.

“நீங்கள் சொல்வது சரிதான். அவன் சம்மதிக்கத்தான் மாட்டான்.”

“மேலும் எனக்கு இங்கு என் வேலையே சரியாயிருக்கிறது” என்று பெருமையோடு சொல்லிக்கொண்டாள் தாய்.

“ஆமாம். அதுவும் நல்லதுதான்” என்றாள் சாஷா.

திடீரென அவள் எதையோ விட்டெறியப்போவது போல் துள்ளியெழுந்தாள்; எளிமையோடும் அமைதியோடும் பேசத் தொடங்கினாள்.

“அவள் ஒன்றும் அங்கே வாழ்ந்துகொண்டிருக்கமாட்டான்.

எப்படியும் அவன் ஓடிவந்துவிடுவான்....."