பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

38

மக்சீம் கார்க்கி


"நமக்கு வயிறு மட்டும் நிரம்பினால் போதுமா? இல்லை அதுமட்டும் இல்லை!” என்று அந்த மூவரையும் நோக்கி அமைதியாகச் சொன்னான். “நமது முதுகிலே குதிரையேறிக்கொண்டிருப்பவர்களுக்கு நமது கண்களைத் திரையிட்டு மூடிக் கட்டிவிட்டவர்களுக்கு, நாம் எல்லாவற்றையும் பார்க்கவே செய்கிறோம் என்பதை எடுத்துக் காட்டத்தான் வேண்டும். நாம் முட்டாள்கள் அல்ல; நாம் மிருகங்கள் அல்ல-வயிற்றை நிரப்புவதோடு திருப்தி அடைந்துவிடுவதற்காக மட்டுமல்லாமல் கெளரவமுள்ள மனிதர்களாக வாழ விரும்புகிறோம். நம்மை நரக வாழ்வுக்கு உட்படுத்தி நம்மை ஏய்த்து வாழ்ந்து கொண்டிருக்கும், நம்மைவிடச் சிறந்த அறிவாளிகள் என்று தம்மைக் காட்டிக் கொள்ளும் நமது எதிரிகளுக்கு நாம் அவர்களுக்குச் சமதையான அறிவாளிகள், ஏன் அவர்களை விடச் சிறந்த அறிவாளிகள் என்பதைக் காட்டித்தானாக வேண்டும்.

அவன் பேச்சைக் கேட்டுத் தாயின் உள்ளத்தில் ஒரு பெருமை உணர்ச்சி உள்ளோட்டமாக ஓடிச் சிலிர்த்தது. “அவன் எவ்வளவு அழகாகப் பேசினான்!”

“போதுமான அளவுக்குச் சாப்பிடுபவர்கள் எவ்வளவோ பேர் இருக்கிறார்கள். ஆனால் சிலர்தான் நேர்மையானவர்கள்!” என்றான். அந்த ஹஹோல் “முடைநாற்றமெடுத்து நாறும் இன்றையக் கேவல வாழ்வுக்கும், எதிர்காலத்தில் ஏற்படப்போகும் மனித குலத்தின் சகோதரத்துவ சாம்ராஜ்யத்துக்கும் இடையே நாம் ஒரு பாலம் கட்டியாக வேண்டும். தோழர்களே! அதுதான் இன்று நம்முன் நிற்கும் வேலை!”.

“போராடுவதற்குரிய காலம் வந்துவிட்டதென்றால், ஏன் கையைக் கட்டிக்கொண்டு சும்மா உட்கார்ந்திருக்கிறீர்கள்?” என்று கரகரத்த குரலில் ஆட்சேபித்தான் நிகலாய்.


நடு இரவுக்குப்பிறகுதான் அந்தக் கூட்டம் கலைந்தது. கலையும் போது நிகலாயும் செம்பட்டைத் தலையனும்தான் முதலில் வெளியேறினர். இதைக் கண்டதும் தாய்க்கு அவர்களைப் பிடிக்கவில்லை.

அவர்களை அவள் வணங்கி வழியனுப்பும்போது உங்களுக்கு ஏன் இத்தனை அவசரமோ?” என்று மனதுக்குள் கேட்டுக்கொண்டாள்.

“நஹோத்கா! என்னை வீடுவரை கொண்டுவந்து விடுகிறீர்களா?” என்று கேட்டாள் நதாஷா.

“கண்டிப்பாய்” என்று பதிலளித்தான் ஹஹோல்.

நதாஷா தனது மேலுடையணிகளைச் சமையலறையில் அணிந்து கொள்ளும்போது, தாய் அவளைப் பார்த்துக் கேட்டாள்; “உங்கள்