3
உயர்விலே ஆசை
மனக்கோளாறுகளின் காரணத்தைக் கண்டுபிடிப்பதற்கு அடிமனத்தில் அழுந்திக் கிடக்கும் சிக்கல்களைக் கண்டறிந்து வெளிப்படுத்துவதே முக்கியம் என்று
பிராய்டு அதில் கவனம் செலுத்தினார். பாலுணர்ச்சி அல்லது பாலுந்தல்தான் மனிதனுடைய வாழ்க்கையில் முக்கிய ஸ்தானம் வகிக்கிறது என்று பிராய்டு கருதுகிறாரல்லவா? இந்தப் பாலுந்தலினால் ஏற்படும் தகாத இச்சைகளும்,
இழிந்த உணர்ச்சிகளும் மேலோங்காதவாறு மனிதனுடைய மனச்சாட்சி தடுக்க முயல்கிறது. இதனால் மனத்தில் ஒரு போராட்டம் ஏற்பட்டுச் சிக்கல்கள் தோன்றுகின்றன.
இவ்வாறு அமுக்கி வைக்கப்பட்ட இழிந்த உணர்ச்சிகள் அடிமனத்தில் தங்கியிருந்து நேரான பாதையை விட்டுக் குறுக்கு வழிகளில் திருப்திபெற முயல்கின்றன. இதுவே மன நோய்களுக்குக் காரணம். ஆதலால் அந்த இழிந்த உணர்ச்சிகளை அடிமனத்திலிருந்து வெளிக் கொணர்ந்து அவற்றை நோயாளி உணரும்படி செய்து விட்டால் மன நோய் நீங்கிவிடும் என்ற முடிவுக்கு வந்து, இதற்கான வழிமுறைகளை வகுப்பதில் பிராய்டு ஈடுபட்டார்.
தகாத இச்சைகளை அடக்கி மேலோங்காமல் செய்வதில் மனச்சாட்சி எந்த நிலையிலும் ஒரே மாதிரி எச்சரிக்கையாக இருப்பதில்லை. தூங்கும்போது இந்த மனச்சாட்சியின் கவனம் சற்றுத் தளர்கிறது. அதனால் அந்தச்