பக்கம்:தாவிப்பாயும் தங்கக் குதிரை.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

31

கிடைத்த மாதிரி இருக்கும்” என்று மொழிந்தான் சிற்றப்பன்.

“அந்தத் தங்கக் குதிரையை அடைவதில் என்ன தடை இருக்கிறது?’ என்று கேட்டான் வெற்றிவேலன்.

“அல்லும் பகலும் கண்மூடாமல் அங்கு ஒரு வேதாளம் காவல் இருந்து வருகிறது. அந்த வேதாளத்தைக் கொன்று வீழ்த்தக்கூடிய வீரன் இந்த மண்ணுலகில் இன்னும் பிறக்கவில்லை” என்று சொன்னான் சிற்றப்பன்.

“இதோ நான் பிறந்திருக்கிறேன். சிற்றப்பா இப்பொழுதே என்னை அனுப்பி வையுங்கள். எப்படியும் அந்தத் தங்கக் குதிரையை இங்கே கொண்டு வந்து சேர்க்கிறேன். இந்த முயற்சியில் நான் இறந்தாலும் சரியே” என்று வீராவேசமாக முழங்கினான் வெற்றிவேலன்.

உண்மையிலேயே இந்த வீரமொழிகளைக் கேட்டு அவன் சிற்றப்பன் மகிழ்ந்து போனான். தன் சூழ்ச்சி பலித்தது என்று கருதினான். வேதாளத்தின் கைப்பிடியில் சிக்கியவர்கள் உயிருடன் மீண்டதில்லை. அவர்களோடு இவனும் போய்ச் சேரட்டும் என்றுநினைத்துக் கொண்டு வெற்றிவேலனை வழி அனுப்பி வைத்தான்.