உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தாவிப்பாயும் தங்கக் குதிரை.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



நெருப்பு மூச்சுவிடும் எருதுகள்

தன் தோழர்களான ஐம்பது வீரர்களும் புடைசூழ வெற்றிவேலன் அந்த நிலத்திற்குள் நுழைந்தான். வீரர்களை ஒரு புறத்தில் நிற்க வைத்துவிட்டு அவன் அந்த எருதுகளை நெருங்கினான். வெற்றிவேலன் எருதுகளின் அருகில் வந்தவுடன், அரசனுடைய ஆட்கள் அவற்றைக் கட்டியிருந்த கயிற்றை வாளால் வெட்டித் துண்டித்து விட்டார்கள். உடனே அவை பெரு மூச்சுவிட்டுக் கொண்டு அனல் கக்கியவண்ணம் வெற்றிவேலனை நோக்கிப் பாய்ந்தன.

அவற்றின் கொம்புகள் இருப்பாணிபோல் கூர்மையாக இருந்தன. வெயில் ஒளிபட்டுப் பளபளவென்று மின்னின. அவை பாய்ந்தோடி வந்த போது நிலம் அதிர்ந்தது. அவற்றின் மூக்குத் துவாரங்களிலிருந்து முன்னிலும் அதிகமாக நெருப்புச்சுழல்கள் வெளிப்பட்டன. அந்த நிலமே நெருப்புப் பற்றி எரிவதுபோல் காட்சியளித்தது. ஆனால், அவை வெற்றி வேலனை ஒன்றும் செய்யவில்லை. மேகமாலையின் மாய மருந்து அவன்கையில் இருந்த-