பக்கம்:தித்தன்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

— 14 - என இளங்கோவடிகள் கூறுதலான் அறியலாம். சோழன் கரிகால்வளவன் மகளை மணந்த அத்தி என் பவன் 'வஞ்சிக்கோன்' என வழங்கப்படுதல் சிலப் பதிகார வழக்குரை காதையான் அறிந்தது. இவ் வத்தி, சேரன் படைத் தலைவருள் ஒருவன் என்பது பெரும்பூட் சென்னி பொருது சேரனது கழுமலங் கொண்ட போரில், சேரனுக்குப் படைத்துணையாய்ப் பொருத பலருள் 'கன்னனேற்றை நறும்பூணத்தி' (அகம் 44) என இவ்வத்தி கூறப்படுதல் காண்க. இராச குலத்திற் பிறந்ததே கொண்டு அரசாளாவிடி லும் அப் பலரையும் அரசராகவே உபசரித்து வழங் கல் ஒத்த பண்பினரொன்பது மன்னர்' எனச் சிலப் பதிகார நீர்ப்படைக் காதையி னிளங்கோவடிகள் வழங்குதலானறியலாம். சோனடு ஒன்பது மன்னரா லாளப்படுவ தென்பது இயையாமை காண்க. இவ் வத்தியைப் பொருகன் (அகம்) என்றது பொரு கின்ற வீரனுதல் பற்றி. ஊர்கொள வந்த பொருகன்' (புறம் 83) எனவும் 'மாங்தையோர் பொருரு (பதிற் றுப். 90) எனவும் வருதல் காண்க. இவனே ஆதி மந்தி ஆடுகள மகன்” (குறுங். 31) என்றது ஆடுகோட் பாட்டுச் சேரலாதன்போற் போர்க்களத் தாடுங்கோ' (பதிற் 56) ஆதல்பற்றி யென்றுணர்க. ஆதிமந்தி 'பீடுகெழு குரிசிலுமாடுகளமகனே' (குறுங் 31) என்ற துங் காண்க. ஈண்டுப் 'பீடுகெழு குரிசில்' என்றதற் கேற்பக் "கடுந்திறலத்தி" (அகம்) என வருதலுங் காண்க. ஆதிமந்தி தன்னை ஆடுகள மகளென்றது வில்லோர் களத்தும், மகளிர் துணங்கையாடுங் களத் தும் அப்போது சு ற் றி த் திரிதலான் என அறிக. இவற்ரும் பேரரசர் தலைநகர்களிற் சாமந்த ராசர்க்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தித்தன்.pdf/19&oldid=894330" இலிருந்து மீள்விக்கப்பட்டது