பக்கம்:தித்தன்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

— 39 — இனிப் பரணர் கற்றிணையிற் பாடிய "சிறுகோற சென்னியா ரேற்றன்ன' (365) என்னும் அடியிற் 'சிறு கோற் சென்னி' என்ற தொடரைச் சில ஆர்க ளளவே ஆளுஞ் செங்கோலை யுடைய சோழன் என்று பொருள் கொண்டு, பரணர் காலத்துச் சோழர் சிறு கிலேயிலிருந்து பின்னர் பெருகினரென்று ஒரு கதை கட்டினர் உண்டு. இது சிறு கோல் என்பதன் பொருள் இன்னதென்று தெரியமாட்டாமையாலுண் டாகிய தவறேயாம். சிறுகோல் என்பது குதிரையை விரையச் செலுத்தற்குக் கையிலேந்திய முட் கோல் என அவரறிகிலார். சோழன் கண்ணுர் கண்ணிக் கலிமான் வளவன்' (புறம், 39) எனப்பாடுதலால் அவன் பரியை விரையச் செலுத்தும் சிறு கோலை அடிக்கடி கையிலேந்தி நிற்ற லியல்பே யாகும். இவ் வழக்கம் அரசர்குல மக்கள் பாலின்றுங் காணலாம். 'சிறு கோலுளையும் புரவி' (புறம். 852) என இந் நற்றி னே ப் பாட்டுப் பாடிய பரணரே பாடிக் காட்டுதலான் இதனுண்மை யுணர்க. இதற்ை பரணர் காலத்தே சோழர் சிறுகாடுடையராகாது 'அ. க ன் ற லை நாடு” (புறம். 63 பரணர் வாக்கு) என்று பெரிய இடங் கொண்ட காட்டினராக விருந்தது கன்கு புலன் கொள்க. பரணர் போலவே கண்ணகி காரணமாகப் பேகனைப் பாடிய பெருங்குன்றுார் கிழார், 'நீர்திகழ் கழனி நாடுகெழு பெருவிறல் வான்ருேய் நீள்குடை வயமான் சென்னி" (புறம். 266) எனப் பாடியதனை முன்னரே காட்டினேன்; அதனையும் ஈண்டைக்கேற்ப நோக்குக.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தித்தன்.pdf/44&oldid=894357" இலிருந்து மீள்விக்கப்பட்டது