பக்கம்:திரட்டுப் பால்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

姥8 திரட்டுப்பால் போதாய்; இனி மனமே, தெரியாதொரு யூதர்க்குமே.” ஆனந்த அநுபவத்தில் உடம்பே மறந்து போயிற்ரும், 'மவுணத்தை உற்று, நின்னே உணர்ந்துணந்து எல்லாம் ஒருங்கியநிர்க்குணம் பூண்டு,என்னேமறந்திருந்தேன் இறந்தே விட்ட திவ்வுடம்பே. அந்த ஞானம் அவிரோத ஞானம். தாமே அநுபவித்தாலன்றிச் சொல்ல முடியாத இன்பம் அவள் பெற்ற அநுபவம். மோலே கொள இங்ங்ன் காண்பதல்லால் மனவாக்குச் செயலாலே அடைதற் கரிதாய் அருவுருவாகி ஒன்று போலே இருக்கும் பொருளே எவ்வாறு புகல்வது?’காம சமுத்திரத்தை அவர்கடந்து விட்டார். தப்பிப்போன மனத் துக்கு எட்டாத ஞானகலே அவர் கண்ட கலே. பத்தித்துறை இழிந்து ஆனந்த வாரி படிந்து புத்தித் தரங்கம் தெளிந்தது. கலவிக்கள்ளே மொண்டுண்டு அயர்கினும் வேல்கற வேன்’ என்கிருர், ஆயர்கினும் என்பது அயர்வதில்லே என்ற குறிப்பை உடையது, நாள் என் செயும்? வினேதான் என் செயும்? என நாடி வந்த கோள், என் செயும், கொடுங் கூற்று என் செயும்? என்று இறுமாந்து வினவுகிறர். பிறப்பு இறப்பை விட்டு முருகளுேடு ஒன்ருக ஒன்றியவர் அவர். அவன் கால் பட்டு அவர் தலே யெழுத்தாகிய பிராரப்தகர்ம மும் அழிந்து விட்டதாம். பிராரப்தம் அநுபவித்தே திரவேண்டும் என்பர். ஆனல் அருணே முனிவர் அதையும் வென்றுவிட்டார். முருகனே ஞான சொரூபி என்று உணர்ந்தார். பத்தித்துறை இழிந்து ஆனந்தவாரி படிந்தார்; அப்போது தித்தித்திருக்கும் அமு காகிய அநுபவத்தைக் கண்டார். அதுவே பத்தித் திருமுகம் ஆறுடன் பன்னிரு தோள்களுமாய்த் தித்தித்திருக்கும் அமுது. புத்திக்கமலத்து உருகிப் பெருகிப் புவனத்தையே எற்றித் தந்திக் கரை புரளும் பரமானந்த சாகரத்தில் அந்த அமுதை உண்டார். புத்தியை வாங்கி முருகன் பாதாம்புயத்தில் புகட்டி அன்பால் முத்தியை வாங்க அறிந்தவர். தொண்டர்குழாத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரட்டுப்_பால்.pdf/36&oldid=894395" இலிருந்து மீள்விக்கப்பட்டது