பக்கம்:திரவிடசப்ததத்வம்.djvu/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

கசு திரவிடசப்ததத்வம். சோகா - சோகம் + கா. 15-ம். ப. செம்மா என்ப அல்லா - அல்லல் + கா. தனைப்பார்க்க. காத்தலென்னும் பொருளுடைய கா என்னும் பகுதி பின்வந்த பெ யர்களோடு சேர்ந்து விகாரப்பட்டுவந்தது. விகுதி. 7. பகுபதங்களின் ஈற்றுறுப்பு விகுதியெனப்படும். பால்காட்டும் விகுதிகள், (1) ஆண்பால் விகுதி . அன் ...... இராமன் கொற்றன் கிருஷ்ணன் பிறன் சாத்தன் உளன் தாரினன், இன் ஆறாம் வேற்றுமையுருபு உடைமைப் பொருளைக் காட்டுகின்றது. தாரினன் - 'மாலையை யுடையவன்'. அவன் ..... அ என்னும் சுட்டிடைச்சொல்லோடு அன் விகுதிசோ அவன் என்னும் ஸர்வநாமம் வந்தது. அதுவே விகுதியாயும் வருகின்றது. அனன் விகுதியைப் பார்க்க. வந்தவன் கரியவன் வருபவன் சிறியவன் வருகின்றவன் வல்லவன் வன் .... அவன் விகுதியில் அகரீக் தொக்கது. சிறுவன் இளைவன் இவன் * எவன் * மன் ..... வடமன் = வட + வன், வன் விகுதி வகரம் மகர மாய்த் திரிந்தது. சிறுமன் - சிறுவன் ; இதற்குப்பெண் பால் சிறுமி. கன் ..... வன் விகுதியின் வகரம் ககரமாயிற்று. சிறுக்கன் = சிறு + வன் * இவன் எவன் என்பவற்றில் அன் விகுதி வா, இயன் எயன் என நின்று போலிமுறையால் இவன் எவன் எனத் திரிந்ததென்றாலும் அமையும். இங்கு போலி முறை என்பது அவன் என்பதனைப்போல் இயன் எயன் என்பன இவன் எவன் எனத் திரிவதே. ஸர்வநாமப் பிரகாணம் பார்க்க.