________________
திரவிடசப்ததத்வம். உ. வா போ தா வருக 3. எதிர்காலவினை. 4. ஏவல்ழதலியவினை. 44. தொடங்கப்பட்டு முடியாத செய்கையைக் காட்டுவது நிகழ் காலவினை. 45. முடிந்த செய்கையைக் காட்டுவது இறந்தகாலவினை. 46. இனிமேலுண்டாகுஞ் செய்கையைக் காட்டுவது எதிர்கா லவினை. 47. ஏவல் - வியங்கோள் முதலிய பொருளுடையன ஏவல் முதலிய வினை. வாழ் வருவது போவது தருவது வாழ்வது வரல் போகல் தரல் வாழல் போக தருக வாழ்க வருதல் போதல் தருதல் வாழ்தல் இவற்றில் ஒவ்வொன்றும் ஏவல், விதி முதலிய பலபொ ருள்களைத் தருவதனால் அவற்றின் பொருள்களை விதவாது பொதுவாய் அவற்றிற்கு ஏவல் முதலிய வினை யென்று பெயர் தரப்பட்டது. 48. இடைநிலைகளைப் பெற்றுவரும் எல்லா முற்றுவினைகளும் எதிர்மறைப் பொருளில் வரும் வினைகளும் தொ டர் மொழிகள். அவற்றில் நிலை மொழி முக்கா லங்களுக்குரிய பெயரெச்சங்கள் வருமொழி ஸர் வநாமம். இத் தொடர் மொழிகள் தம்முள் விரவி சந்தியால் விகாரப்பட்டு வரும். வந்தவன் = வந்த + அவன் வந்தவள் = வந்த + அவள் வந்தவா = வந்த + அவர் வந்தது = வந்த வந்தவை = வந்த + அவை வந்தாய் = வந்த + நீ * வந்தீர் = வந்த + நீர் * வந்தேன் = வந்த + நான் * வந்தேம் = வந்த + நாம் * * முன்னிலையிலுல் தன்மையிலும் ஸர்வநாமம் விகுதியாய் வந் ததை விகுதிப் பிரகரணத்தில் பார். + - -