பக்கம்:திரவிடசப்ததத்வம்.djvu/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

வினையியல். கூடு முதன்மூன்று வினைகளும் வந்தான் வந்தாள் வந்தார் எனவும் வந்தது வந்த - எனவும் விகா ரப் வந்தவை பட்டுவரும் வந்தவன் என்னும் தொடர்மொழியில் வந்த என்னும் இறந்தகாலப் பெயரெச்சமும் அவன் என்னுஞ் சர் வநாம விகுதியும் வந்தன. அத்தொடர்மொழிக்கு 'வருகையென்னுந் தொழிலைச் செய்த அவன்' என் றுபொருள். இப்படிக்குப் பொருள் கொண்டால் அவன்வந்தவன் என்னும் வாக்கியத்தில் அவன் என் னுஞ் சர்வநாமம் இரண்டு தடவை வருகின்றது. ஆகையால் கூறியது கூறல் என்னுங் குற்ற முளதா கும். என்றாலும் இத்தொடர்மொழியிலுள்ள அவன் என்பது தன்பின்வந்த பெயரெச்சத்தோடு ஓர் சொல்லாய் நின்றபின் விகுதித் தன்மையைப் பூண் டது. ஆகவே கூறியது கூறலென்னுங் குற்றம் நீங் கியது. இவ்வாறு மற்றவினைகளிலும் கடையில் வந் தவைகளை விகுதியாய் வந்த சர்வநாமமாகக் கொள் ளவேண்டும். ஒழிந்த காலங்களில் வரும் வினைகளையும் இவ்வாறு பெயரெச்சங்களும் சர்வநாமங்களுமாகப் பிரிக்க வேண்டும். வருகின்றவன் = வருகின்ற + அவன் வருகின்றவள் = வருகின்ற + அவள் வருகின்றவர் = வருகின்ற + அவர் வருகின்றது = வருகின்ற + அது வருகின்றவை = வருகின்ற + அவை வருகின்றாய் = வருகின்ற + நீ வருகின்றீர் = வருகின்ற + நீர் வருகின்றேன் = வருகின்ற + நான் வருகின்றேம் , வருகின்ற + நாம். வருகின்றவன் , வருகின்றான் வருகுன்றவள் , வருகின்றாள் வருகின்றவர் , வருகின்றார் எனவும் குறுகிவரும். வருகின்றது, வருகின்றவை, வரு கின்ற என ஈற்றுத் துகரமும் வைகாரமும் தொக்கு வரும். அப்படியே,