பக்கம்:திரவிடசப்ததத்வம்.djvu/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

வினையியல் மேற்கண்ட வினைகளில் வரும் உங் * என்னும் இடை நிலைக்கு மூலமாகியது உத் என்னு மிடைநிலை. இது வே பிற்காலத்தில் உவ் எனத்திரிந்தது. உவ்விடை நிலையானது கன்னடத்தில் நிகழ்காலத்தையும் எ திரகாலத்தையும் காட்டுகின்றது. தமிழிலும் செய் யுமென்னு முற்றும் எச்சமும் அவ்விரண்டுகாலத் - தையுங் காட்டும். செய்யுமென்னு மெச்சம் செய் யுவ என அகரவீனாய் நின்றது. பிற்காலத்தில் அக ரங்கெட வகரமானது மகரமாய்த் திரிந்தது. இந்த உவ்விடை நிலைக்கு முதனிலையாகிய உத் என்பது தெலுங்கில் இழிந்தோர் வழக்கத்தின்கண் வரும | ழைய நிகழ்காலவினையாகிய அல்ல எல் ஒல் என்னும் வனைகளில் காணப்படுகின்றது. மலயாளத்தில் ஆடுங்கான் டாடுக்கான் எனவும் புதிய கன்னடத்தில் பல, எல எனவும் நிகழ் காலத்தில் வரும். இவற்றில் உத் உம் இடைநிலை நிகழ்காலத்தைக் காட்டுகின்றது. இந்த உத்என்னும் இடைநிலையே உவ் உம் எனப் பிற் காலத்தில் திரிந்து எதிர்காலத்திலும் நிகழ்காலத் திலும் வந்தது. இந்த இடைநிலை எதிர்கால நிகழ் காலங்களில் வந்ததென்பதற்கு வேறோ திருஷ டாந்தம் உண்டு. உடன்பாட்டுவினையின் இடை நிலைமெய்யின் பின் ஆ, அல் விகுதிகளைவைத்து, அந்த மெய்யின்பின் உயிரிருந்தால் அதனை கெடுத்து அதனிடத்தில் ஆ அல் விகுதிகளை வைத்தால், எதிர மறைவினையுண்டாம் என்பது எதிர்மறை வினை ப் பொதுவிதி. அதன்படி செய்யாத என்பது இறந்தகாலத்தில் செய்த எனும் உடன்பாட்டுப் பெ யாச்சத்தின் எதிர்மறை. செய்யாத வென்னும் இறந்தகாலப் பெயரெச்சம் எதிர்கால நிகழ்காலத் திலும் வருவதனால் அவ்வெதிரமறைக்கு மூலமான செய்யுத எனனும் உடன்பாட்டுப் பெயரெச்சம் எதிர்காலத்தையும் நிகழ் காலத்தையுங் காட்ட வேண்டும். | * எதிர்காலலில் உதாரிக்கப்பட்டிருக்கின்ற திருவிளையாடற் செய் யுளில்வந்த உய்குமம் என்னும் வினை உய்குவோம் எனப் பொருள் கொ ண்ட து.