பக்கம்:திரவிடத்தாய்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

யாதல் காண்க. ஆகுங்கள் என்பதில் 'ங்கள்' என்னும் கூறு 'ண்டி' என்றாதலையும் கவனிக்க.

பெயரெச்சங்கள்

சின்ன - சின்ன; பெரிய - பெத்த; கெட்ட - செட்ட; வேறு, வேறே - வேரே; வெற்று - வட்டி; நீள, நீடிய - நீடுத; குறு - குருச்ச; உள்ள - உன்ன; இலாத - லேனி; புது - கொத்த; பழைய - பாத்த; அரு - அருது, இள - எல; எல்லா - எல்ல; ஒண்டி - ஒண்ட்டி.

வினையெச்சங்கள்

மெள்ள - மெல்லகா; சரியாய் - சரிகா; முற்றிலும் - பொட்டிகா; முந்தி - முத்துகா; கெட்டியாய் - கட்டிகா; மிகுதியாய் - மிக்கிலிகா.

இடைச்சொற்கள்

ஏ - ஏ; ஓ-ஓ; ஆவா, ஆகா - ஆஹா, ஓகோ - ஓஹோ; அடே - அரே; அக்கடா - அக்கடா; அப்பா - அப்பா; ஐயோ - அய்யோ; மற்றும் - மறியு; மறித்தும் - மரல; சரி - சரி; குறித்து - குரிஞ்சி; முந்தி - முந்து; அதோ - அதிகோ.

உம் - உன்னு, னு னி யு; கள் - லு; ங்கள் - ண்டி.

கூட - கூடா; கு - கு, கி; மீது - மீத; கீழ் - கிடந்த; மேன - பயின; பின்னுக்கு - வெனுக்க; உள் - லோ; உள்ளுக்கு - லோக்கி; உளுப்பட - லோபல. உரிச்சொற்கள்

கடு (மிகு); வடி (கூர்) - வாடி; சால் - சாலு; சீர்த்தி, கீர்த்தி - கீர்த்தி.

குறிப்பு: தமிழில் உரிச்சொல்லாயிருப்பவை தெலுங்கிலும் உரிச்சொல்லா யிருக்கவேண்டும் என்னும் யாப்புறவில்லை. உலகவழக்கற்ற செய்யுட் சொல்லே அல்லது செய்யுட் பொருள்பட்ட சொல்லே உரிச்சொல்லென் றறிக.

சொற்றொடர்

தனித்திரவிடச் சொற்றொடர்

ஆ சின்னவாடு இப்புடு வ்ராஸ்துன்னாடு = அச் சிறுவன் இப்போது வரைந்து (எழுதிக்) கொண்டிருக்கிறான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரவிடத்தாய்.pdf/103&oldid=1430767" இலிருந்து மீள்விக்கப்பட்டது