பக்கம்:திரவிடத்தாய்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

3. தமிழ் என்னும் பெயர்

தமிழ் என்னும் பெயர்க்குப் பொருத்தமான பொருள்கள் தனிமையாக ழகரத்தைக் கொண்டது, (2) தனிமை என இரண்டு. இவற்றுள், முன்னது பொருளாயின் உலகில் பிறமொழி அல்லது மொழிகள் தோன்றின அல்லது திரிந்த பின்னும் தமிழில் ழகரந் தோன்றின பின்னும் தமிழுக்குப் பெயர் ஏற்பட்டிருத்தல் வேண்டும். பின்னது பொருளாயின் தமிழ் என்னும் பெயர் முதலிலேயே தமிழையோ முதலாவது தமிழர்க்குப் பெயராகிப் பின்பு தமிழையோ குறித்திருத்தல் வேண்டும். இதுவும் பிறநாடும் பிறமொழியும் தோன்றிய பின்னரே நிகழ்ந்திருத்தல் கூடும். பல மொழி வழங்காத போது ஒரு மொழிக்குமட்டும் சிறப்புப் பெயர் அமைதல் அரிது. இவ் வியல்பு பிற பொருள்கட்கும் ஏற்கும். தனிமை என்று பொருள்படும்தமிழ் என்னுஞ் சொல் முதலாவது தமிழரைக் குறித்திருப்பது அவரின் தனிப்பட்ட நாகரிகம்பற்றி. பண்டைக் காலத்தில் நாவலந்தேயத்தில் (இந்தியாவில்) மட்டுமல்ல, உலக முழுவதி லுமே தமிழர் தலைசிறந்த நாகரிகராயிருந்ததினால் தனிப்பட்டவர் என்னும் பொருளில் தமிழர் எனப்பட்டனர். பழந்தமிழரின் நாகரிகத்தை, அவருடைய பழக்கவழக்கம், சிறந்த கருத்துகள், செய்யுள்வன்மை, அவர் செய்திருந்த பொறிகள், தமிழின் அமைதி, முத்தமிழ்ப் புணர்ப்பு, தமிழ்க்கலை நூல்கள் முதலியவற்றால் அறியலாம். அவரது சிறந்த ஒழுக்கத்தினாலேயே,


"வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறும் நல்லுலகத்து"


எனப் பண்டைத் தமிழகத்தைப் பாராட்டிக் கூறினர் பனம் பாரனாரும்.


"நாடா கொன்றோ காடா கொன்றோ அவலா கொன்றோ மிசையா கொன்றோ எவ்வழி நல்லவர் ஆடவர் அவ்வழி நல்லை வாழிய நிலனேக (புறம். 187)


என்றார் ஒளவையாரும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரவிடத்தாய்.pdf/12&oldid=1430592" இலிருந்து மீள்விக்கப்பட்டது