பக்கம்:திரவிடத்தாய்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

ஒரு குலத்தாரின் அல்லது நாட்டாரின் பெயர் திரிந்தும் திரியாதும் அவரது மொழியைக் குறிப்பது இயல்பே. ஆங்கிலரது (Angles) மொழி ஆங்கிலம் (English) என்றும், செருமனியரது (Germans) மொழி செருமனியம் (German) என்றும் கூறப்படுதல் காண்க.

தமிழ் என்னும் சொல் தனிமை என்று பொருள்படும் போது, அதன் ழகரம், அமிழ் இமிழ் உமிழ் குமிழ் என்பவற்றிற்போல ஒரு விகுதியாம்.

தமிழ் இனிமையா யிருத்தலின், தமிழ் என்னுஞ் சொல்லுக்கு இனிமைப் பொருள் கூறுவர். இது வழிப்பொருளேயன்றி வேர்ப்பொருளன்று.

4. குமரி நாடே (Lemuria) தமிழ் (திரவிடம்) தோன்றிய இடம்

உலகில் இதுபோது திரவிடமிருப்பது இந்தியாவே; இந்தியாவிலும் திரவிடத்திற்குச் சிறந்தது தென்னாடே; தென் னாட்டிலும் சிறந்தது தமிழ்நாடே; தமிழ்நாட்டிலும் மொழித் திருத்தம் தெற்கு நோக்கியதே.

முத்தமிழ் நாடுகளில் பாண்டி நாட்டையே தமிழ் நாடென்றும், முத்தமிழரசருள் பாண்டியனையே தமிழ்நாடன் என்றும், பண்டைக் காலத்திலேயே சிறப்பித்துக் கூறினர். இன்றும் பாண்டிநாட் டெல்லையில்தான் தமிழின் வளத்தையும் தூய்மையையும் ஒரு சிறிது காணலாம்.

பாண்டி நாட்டின் பெரும்பகுதி ஈராயிரம் ஆண்டுகட்கு முன்னரே சிறிது சிறிதாகத் தென்பெருங் கடலில் மூழ்கிவிட்டது. பாண்டியர் இரீஇய முக்கழகங் (முச்சங்கங்)களும் நீடித்த காலத்தன; நெட்டிடையிட்டன.

இறையனாரகப்பொருளுரையில் முக்கழக வரலாற்றில்,

"தலைச்சங்க மிருந்தார்...நாலாயிரத்து நானூற்று நாற்பதிற்றியாண்டு சங்க மிருந்தா ரென்ப. அவர்களைச் சங்கமிரீஇயினார்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரவிடத்தாய்.pdf/13&oldid=1430593" இலிருந்து மீள்விக்கப்பட்டது