பக்கம்:திரவிடத்தாய்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

மலையாளச் சொல் வரிசைகள் (i) பெயர்ச் சொற்கள் 1. மூவிடப்பெயர் தன்மை முன்னிலை படர்க்கை தற்சுட்டு ஒருமை: ஞான் நீ அவன், இவன்அவள், இவள்அது, இது தான் பன்மை: நாம்நம்மள்ஞங்கள் நிங்கள் அவர், இவர்அவ, இவ தங்ஙள்தாங்ஙள்தாங்கள்

2. வினாப் பெயர்

ஆண் பெண் பொது அஃறிணை ஒருமை: எவன் எவள் ஆர் எது, யாது, எந்து பன்மை: எவர்,யாவர் யார் எவ, யாவ

என்னது (த.) = எந்து (ம.)

3. முறைப் பெயர்

அப்பன், அம்ம, அம்மாயி (பாட்டி), மகன், மகள், மருமகன், மருமகள், பேரன் முதலிய முறைப்பெயர்கள் செந்தமிழ்ச் சொற்களாகும்.

மூத்தச்சன், மூத்தப்பன், பேரப்பன்; மூத்தம்ம, மூத்தச்சி; வலியச்சன் (பெரியப்பன்), வலியப்பன், இளையப்பன் குஞ்ஞச்சன் (சிற்றப்பன்), பெண்ணப்பன் (மாமன்), பெண்ணம்ம (மாமி), கெட்டியவன் (கணவன்), கெட்டியவள் (மனைவி) முதலிய முறைப்பெயர்கள் கொடுந் தமிழ்ச் சொற்களாகும்.

ஜ்யேஷ்டன், ஜ்யேஷ்டத்தி, அனுஜன், அனுஜத்தி முதலிய வடசொற் பெயர்கள் வழக்கூன்றியதால், அண்ணன், அக்கை, தம்பி, தங்கை முதலிய செந்தமிழ்ப் பெயர்கள் மலையாளத்தில் வழக்கு வீழ்ந்தன.

அச்சி, அப்பச்சி என்னும் ஒருபான் முறைப்பெயர்கள் செந்தமிழ் நாட்டில் சில குலத்தாரிடை வழங்குகின்றன. இவையும் இவற்றின் ஆண்பால் வடிவங்களான அச்சன், அப்பச்சன் என்பனவும் ஒருங்கே மலையாள நாட்டில்தான் வழங்குகின்றன. குறிப்பு: அத்தன்-அச்சன், அத்தி-அச்சி, த-ச, போலி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரவிடத்தாய்.pdf/51&oldid=1430684" இலிருந்து மீள்விக்கப்பட்டது