பக்கம்:திரவிடத்தாய்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

(பேச்சாளி. மாற்றம் = சொல்), மாறாளி (விற்கிறவன். மாறு = வில்), சமர்த்த, மந்தி (மாந்தர்), குண்ட்ட (முடவன்), குருட, மூட, ஊமெ, முதுக (கிழவன்), சோமாரி (சோம்பேறி), சிக்கவனு (சிறியவன்), சண்ணவனு (சின்னவன்), ஹொசெயனு (புதியன்), எளெகவனு (இளையவன்), கரியவனு, கரியனு, நெரெயவனு (நெருங்கியவன்), பிளியவனு (வெளியவன்), ஹளெபனு (பழையன்), கள்ளனு, ஒடெய தூத, கம்மார, காவலுகார, அர மகள், நாணிலி, அம்மண்ணி, ஆண்டி ஒட்ட (ஒட்டன்), கன்னெ (கன்னி), குதுரெகார, கொரவ (குறவன்), செம்பு குட்டிக (செம்பு கொட்டி), தலாரி (தலையாரி), திண்டிப் போத்த (தின்றிப்போத்து - ஆகுபெயர்).

5. விலங்குப் பெயர்

ஆவு, ஆனெ (ஆனை), எத்து (எருது), ஒண்ட்டெ (ஒட்டை), கரு (கன்று) , குதுரெ, ஆடு, குரி (கொறி = ஆடு), நரி, நாயி, சிரத்தெ (சிறுத்தை), மரி (மறி=குட்டி), ஹுலியு (புலி), கழ்தெ (கழுதை), கடசு (கிடாரி), தகரு (தகர்), மேக்கெ (மோத்தை = வெள்ளாட்டுக்கடா), கூளி, ஹோத்து (போத்து), மொலவு (முயல்), குணி மொலவு (குழி முயல்), ஹந்தி (பன்றி), பெக்கு (வெருகு), எய், எம்மெ (எருமை), கடவெ (கடமை), கரடி, கந்து (கன்று), குட்டி, குரங்கி.

6. பறவைப் பெயர்

ஈச்சல் (ஈசல்), அந்தி (அந்து), கிளி, கிணி (கிளி), கோளி (கோழி), காகி (காக்கை), பைரி (வைரி), கூகெ (கூகை), கடல் காகி, நீருகோளி, நவில் (மயில்), பர்து (பருந்து), பாவல், (வாவல்), ஆந்தெக (ஆந்தை), குகில் (குயில்), குளவி, கொக்கரே (கொக்கு).

7. ஊர்வனவற்றின் பெயர்

அணில், உடு (உடும்பு), இறும்பு (எறும்பு), ஹாவு (பாம்பு), ஹுளு (புழு), ஹேனு (பேன்), எலி, ஹல்லி (பல்லி), அரணெ, ஹசுருஓதி (பச்சோந்தி), கெத்தல் (சிதல்), ஓதி (ஓந்தி), உடுத்தெ (உறுத்தை = அணில்), கீர (கீரி), சுண்டிலி, தேள்.

8. நீர்வாழ்வனவற்றின் பெயர்

மீனு, ஏடி>எண்ட்ரி (நண்டு), அட்டெ (அட்டை), ஆமெ (ஆமை), சொற (சுறா), தவள (தவளை).

9. மரஞ்செடிப் பெயர்

மரவு (மரம்), மாவு (மா), ராகி (இராகி), களெ (களை), ஹூல்லு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரவிடத்தாய்.pdf/74&oldid=1430712" இலிருந்து மீள்விக்கப்பட்டது