பக்கம்:திரவிடத்தாய்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

அரவத்தஷ்டு, ஒந்து மூவத்தஷ்டு பல கொட்டத்து, கேளுவதற்கெ கிவிகளுள்ளவனு கேளலி".

இதோ, வித்துகிறவன் வித்தப் புறப்பட்டான், அவன் வித்துகையில் சில வழியருகே விழுந்து, பறவைகள் வந்து அதைத் தின்றுவிட்டன. வேறே சில மிகுந்த மண் இல்லாதபாறை யிடங்களில் விழுந்தது. அதற்கு ஆழமான மண் இல்லாத காரணமாய் விரைந்து முளைத்தது; ஆனால் வெயில் ஏறினபோது அது வெந்து, அதற்கு வேரில்லாததால் உணங்கிப் போயிற்று, வேறே சில முட்கள் மேலே விழுந்தது. முட்கள் வளர்ந்து அதை நெருக்கிவிட்டன. வேறே சில நல்ல நிலத்தில் விழுந்து ஒன்று நூறாகவும் ஒன்று அறுபதாகவும் ஒன்று முப்பதாகவும் பலன் கொடுத்தது. கேட்கிறதற்குச் செவிகளுள்ளவன் கேட்கக் கடவன்.

குறிப்பு: மெய்மறை (சத்திய வேதம்) என்னும் கிறித்தவ மறையின் மொழிநடை விடைத்தொண்டராதலால், மேற்கூறிய உவமையில் அஃறிணைப் பன்மையெழுவாய்கள் ஒருமை வினையொடு முடிந்தன; பன்மைச் சொற்கு ஒருமைச்சொல் வந்தது.

3

தெலுங்கு

தெலுங்குநாட் டெல்லை

தென்னிந்தியாவில், கிழக்கே கடற்கரை யொட்டிப் பழவேற்காட்டிலிருந்து சிக்காக்கோல் வரைக்கும், மேற்கே மராட்டிய மைசூர்ச் சீமைகளின் கீழெல்லை வரைக்கும், 'கொடுக்கப்பட்ட கோட்டங்கள்' (Ceded districs) கர்நூல் ஐதராபாத்துச் சீமையின் பெரும்பகுதி நாகபுர நாட்டின் ஒரு பகுதி கோண்டுவனம் ஆகிய இடங்களில் பெரும்பாலும் தாய் மொழியாகப் பேசப்படுவது தெலுங்கு.

தெலுங்குப் பெயர்

தெலுங்கிற்கு வடுகு ஆந்திரம் என்னும் பெயர்களுண்டு. தெலுங்கு என்பது தெலுங்கராலேயே இடப்பட்டது; வடுகு என்பது தமிழராலும், ஆந்திரம் என்பது ஆயராலும் இடப்பட்டன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரவிடத்தாய்.pdf/88&oldid=1430747" இலிருந்து மீள்விக்கப்பட்டது