உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திராவிட இயக்கம்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33


________________

33 அப்படிப்பட்ட நிலை வருவதற்கு முன்னதாக, நம்மை அழைத்து, பிரிட்டிசு பேரரசின் கவுன்சிலில் ஓர் உறுப்பு நாடாக ஆக்குவதற்கு முயற்சி செய்யப்படுமானால் அது நல்லதன்று என்னும் கருத்தைச் சொன்னார். மேலும் "Those principles are utterly repugnant to the caste system as understood and practised among us" என்றார். அந்தச் சமத்துவ சகோதரத்துவக் கொள்கைகள், நம்மால் பின்பற்றப்படும் சாதி அமைப்புக் கொள்கைகட்கு முற்றிலும் எதிரானவையாகும் என்றும் தெரிவித்திருந்தார். வருணப்பிரிவு ஏற்படுத்தப்பட்டதனால், அந்தநாள் மக்களிடையே தொழில் அடிப்படைப் பிரிவினால் அமைந்த குடும்பத் தொழிலை அவரவர் பிள்ளைகள் செய்வதால் தொழில் வளர்ச்சி நன்றாக அமைந்து, நாடும் வளம் பெறத் துணையாயிற்று என்று வைதிகச் சார்பினர் விளக்கம் தருவர். வருணாசிரம தருமப் பெயரால் பிறவி அடிப்படையில் அமையும் சாதி ஆகும் முன்னர் நாலு வகையாகத் தொழில்களைப் பிரித்துக் கொண்டார்கள் என்றாலும், இனப்போராட்ட அடிப்படையில் ஆரிய-திராவிட மாறுபாடு வளர்ந்த காலத்திலே, மாற்று இனத்தை வீழ்த்துவதற்கு ஏற்ற கருவியாக வருணதருமம் பயன்படுத்தப்பட்டது. ஆரிய இனத்தைச் சார்ந்தவர் தொழில்திறன் பெறுவதற்குத் தொடக்கக் காலத்தில் பயன்பட்டு, பின்னர் பிராமண சாதியைச் சேர்ந்தவர்கள் பிற சாதியினர் மீது ஆதிக்கம் செலுத்துவதற்கு ஏற்ற வடிவு கொண்டதாயிற்று என்பது வரலாறு. 'இந்து' கூறுகிறது, Sankaran Nair was criticised for saying this, by a reader of the 'Hindu', who called himself "Plainspeaker'". அப்படி எழுதியவர் சங்கரன் நாயரின் இந்து ஆசிரியருக்குக் கடிதம் அதைப் பார்த்த தேசியக்கவி கருத்தைக் கண்டித்து எழுதுகிறார். ஏட்டில் சி. சுப்பிரமணிய பாரதி, அதைக் கண்டித்து 'இந்து'