உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திராவிட தேசீயம் மாநில சுயாட்சி ஏன்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திராவிட தேசீயம்!

வந்ததுபோல், வெள்ளையன் வெளியேறிய பின் கொடுமைப் படுத்தப்படும் மக்கள் ஒருபக்கமும், கொடுமைப் படுத்துபவர் மற்றொரு பக்கமும் இருந்தார்கள்.

கொடுமைப்படுத்துவோர் வடநாட்டினராகவும், கொடுமைப் படுவோர் தென்னாட்டினராகவும் இருந்தார்கள்.

வடநாட்டினர் சுரண்டுபவராகவும், தென்னாட்டினர் சுரண்டப் படுபவராகவும் இருந்தனர்.

ஆட்டிப்படைப்பது வடக்காகவும் ஆடி அழிவது தெற்காகவும் இருந்தன.

வடவர் அரசு சுரண்டிக் கொழுக்கிறது அங்கே — கொட்டிக் கொடுத்துவிட்டுத் தேம்பித் தவிக்கிறது தெற்கு இங்கே.

பழக்கடை — பூக்கடை

பூக்கடைகளில் சில பழங்களும் இருக்கும்; பழக்கடையில் சில பூக்களும் இருக்கும், பழக்கடையில் மாட்டியுள்ள சாமி படத்துக்கு பூ வைத்திருப்பார்கள். பூக்கடையில் உள்ள படத்தின் அருகே பழம் வைத்திருப்பார்கள்.

இதைப் பார்த்துவிட்டு, 'என்ன பழக்கடையில் பூ இருக்கிறதே' என்றோ, 'பூக்கடையில் பழம் இருக்கிறதே' என்றோ கேட்பதில் பொருளில்லை. அப்படிக் கேட்பவர் தத்துவ விசாரணை இல்லாதவர் என்றுதான் பொருள்.

அதைப்போல, நாம் திராவிடநாடு கேட்கும்போது, 'திராவிட நாடு இல்லை என்பவர்களும் இருக்கிறார்களே' என்றால், இது பழக்கடையில் பூ இருப்பதற்கு ஒப்பானதாகும்.

பழக்கடையில் சில அழுகிய பழங்களும் இருக்கும் — பழக்கடைக்காரர் இங்கு யாராவது இருந்தால் வருத்தப்பட வேண்டாம் என்று

10