உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திராவிட தேசீயம் மாநில சுயாட்சி ஏன்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திராவிட தேசீயம்!

'குருநாதர் கூறியதையே 'மாயை' என்பதா?

'திராவிட உத்கல வங்கா' என்று இரவீந்தரநாத் தாகூர் பாடிய பாடலைப் பாடித்தான் கொடியேற்ற வேண்டும் என்று அரசாங்க விதி இருக்கிறது. அதன்படி ஒவ்வொரு விழா நிகழ்ச்சியிலும் இந்தப் பாடலைப் பாடுகிறார்கள். இத்தனை ஆண்டுக்காலம் இந்தப் பாடலைப் பாடியும் 'திராவிடம் எங்கே இருக்கிறது?' என்று கேட்கிறார்கள். இந்தப் பாட்டை நாள்தோறும் பாடுபவர்கள், அதிகமாகச் சம்பளம் வாங்காத பள்ளி ஆசிரியர்களும், பள்ளிப் பிள்ளைகளும் தான்.

'ஜனகணமன' என்று தொடங்கும் இந்தப் பாடல், எந்த மொழி என்பதே பலருக்குத் தெரியாது. பலபேர் அதை, இந்திமொழி என்று கருதிக்கொண்டிருக்கிறார்கள். உண்மையில் அது இந்தியல்ல - வங்காள மொழியாகும்.

'வங்கத்தில்' பிறந்து, உலகம் மதிக்கத்தக்க மேதையாக விளங்கிய இரவீந்திரநாத் தாகூர், அறிவில்லாமல் இப்படிப் பாடவில்லை. ஒவ்வொரு நாடாகப் பிரித்துப் பிரித்துப் பாடினார். சிந்து நதி பாயும் நாட்டைச் சிந்து என்றும், கங்கை நதி பாயும் நாட்டைக் கங்கா என்றும், யமுனை நதி பாயும் நாட்டை யமுனா என்றும் தமது தாயகத்தை வங்கம் என்றும் உ.பி., பீகார், ஒரிசா முதலிய மாநிலங்கள் உள்ள பகுதியை உத்கல் என்றும் குறிப்பிட்டுப் பாடினார். ஆனால், தமிழ்நாடு, கேரளம், ஆந்திரம், கன்னடம் என்று பாடவில்லை; இந்த நான்கு பகுதிகளையும் சேர்த்து 'திராவிடம்' என்றுதான் பாடினார். ஏன் இப்படிச் சொன்னார்? விவரம் தெரியாததால் சொன்னாரா?

பத்து நாட்களுக்கு முன்புதான் நாடெங்கும் தாகூருக்கு விழா கொண்டாடினார்கள். அவரைத் தங்கள் குருநாதர் என்று ஒரு நாள் பேசுவது; பிறகு அவர் சொன்ன திராவிடம் 'மாயை'என்பதா? எங்கே திராவிடம் என்றா கேட்பது?

12