உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திராவிட தேசீயம் மாநில சுயாட்சி ஏன்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அறிஞர் அண்ணா

உன்னுதிரத்தே உதித்தெழுந்து என்றனரே அவர்கள்!

ஏன் அவர் தமிழ், தெலுங்கு என்று பிரித்துச் சொல்லாமல் திராவிடம் என்றார்?

'கன்னடமும் களி தெலுங்கும் கவின் மலையாளமும் துளுவமும் உன்னுதிரத்தில் உதித்தெழுந்து...' என்று பேராசிரியர் சுந்தரம்பிள்ளை பாடினார். சுந்தரம்பிள்ளையும் கவிஞர் பரம்பரையாகையால், அவர் பாடியதை அறிந்து தாகூரும் பாடினார்.

சிற்பங்களும் கூறுகின்றன 'திராவிடக் கலாச்சாரம்'

'தாகூர் கல்லறைக்கு எங்கே போவது? அதற்கு எங்களுக்கு நேரமில்லை' என்று சொல்லுவீர்களேயானால் பத்து ரூபாய் செலவு செய்யக்கூடியவர்களுக்கு நான் இன்னொரு யோசனை கூறுகிறேன். ஞாயிற்றுக்கிழமைகளில் மாமல்லபுரத்திற்கு அரசாங்கம் பஸ் விடுகிறது; அதில் ஒரு நாளைக்கு ஏறிப்போய்ப் பாருங்கள். மாமல்லபுர சிற்பங்களுக்கு அரசாங்கமே விளக்கம் தந்திருக்கிறது. அந்த விளக்கங்களி லெல்லாம் 'திராவிடக் கலாச்சாரம்' (Dravidian Culture) என்றும் 'சிற்பக்கலை' (Dravidian architecture) என்றும் தான் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

அதேபோல் ஆந்திரத்தில் உள்ள கோபுரமானாலும், கருநாடகத்திலுள்ள மண்டபமானாலும் அவைகளிலெல்லாம் திராவிடக் கலாச்சாரத்தைச் சேர்ந்தவை என்று தான் குறிப்பிடுவார்கள்.

'அவ்வளவு தொலைவு போக முடியாதே' என்றால், இன்னொரு யோசனை சொல்கிறேன். திராவிடம் கிடையாது என்பவர்களே கல்லிலே "திராவிடம்" என்று பொறித்து வைத்திருப்பதைக் காணலாம். ஒரு எட்டணா செலவு செய்து கொண்டு திருவல்லிக்கேணிக் கடற்கரைக்குச் செல்லுங்கள். அங்கேயுள்ள "பிரசிடென்சி கல்லூரி" எதிரில் டாக்டர். உ. வே. சாமிநாத (அய்யர்) சிலை இருக்கிறது. அதைப் பாருங்கள் — எங்கே பெரியார் கோபித்துக் கொள்வாரோ என்ற பயம் உங்களுக்கு வேண்டாம். ஏனென்றால் செத்துப்போன 'அய்யர்'களிடத்தில் பெரியாருக்குக் கோபம்

13