உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திராவிட தேசீயம் மாநில சுயாட்சி ஏன்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திராவிட தேசீயம்!

கிடையாது — அந்தச் சிலைக்கு அடியில் 'திராவிடக் கலாநிதி' என்று கல்வெட்டிலே பொறித்திருக்கிறார்கள்.

இதுவும் வேண்டாமென்றால் அப்படியே அங்குள்ள பல்கலைக் கழகத்துக்குள் சென்று, டாக்டர் ஏ. இலட்சுமணசாமி அவர்களைப் பார்த்து, 'தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளின் துறைக்கு என்ன பெயரிட்டிருக்கிறீர்கள்?' என்று கேளுங்கள். அதற்கு அவர், 'Department of Dravidian Languages' என்று பதிலளிப்பார்.

வேற்றுமைகள் உண்டு — விளக்கங்கள் — காணீர்!

அய்ந்தாறு மாதங்களுக்கு முன்பு சென்னையில் நடை பெற்ற தமிழிசை மாநாட்டில் தலைமை வகித்த அரியக்குடி இராமாநுசம் அய்யங்கார் சொன்னார் — 'தென்னாட்டு இசைதான் கர்நாடக இசை; கர்நாடக இசைதான் தமிழ் நாட்டு இசையும்' என்று. தமிழ் இசை உந்திக்கமலத்திலிருந்து எழுவது; வடநாட்டு இசை தொண்டைக்குக் கீழே இறங்காது! வடநாட்டு இசையைக் கேட்டவுடன் பாடமுடியும் — தென்னாட்டு இசை பாடலாம் போலத் தோன்றும். ஆனால், எளிதில் பாடமுடியாது. வடநாட்டு இசைக்கு சுர பேதங்கள் அவ்வளவாகக் கிடையாது. அதுவும் பாதி மூக்கை அடைத்துக்கொண்டு பாடவேண்டும்.

இப்படி சங்கீதத்தில் மட்டும் அல்ல — வைத்தியத்திலும் வடநாட்டுக்கும், தென்னாட்டுக்கும் வேற்றுமை இருக்கிறது. இங்குள்ள வைத்தியம் சித்தவைத்தியம்; வடநாட்டு வைத்தியம் ஆயுர்வேத வைத்தியம் என்பதாகும்.

வடக்கேயிருந்து வீசும் காற்று வாடை என்றும், தெற்கேயிருந்து வீசும் காற்று தென்றல் என்றும் பெயர் பெறும்.

இலக்கியம் தெரியவில்லை எனில் இப்படிச் சொல்வதா?

அந்தக் காலத்தில் தமிழ்நாட்டில் உண்ணாதிருந்து உயிர்விடுவது — அதாவது சாவதற்காகவே உண்ணாவிரதமிருப்பது ஒரு பழக்கமாக

14