அறிஞர் அண்ணா
இருந்தது. அப்படி உண்ணா விரதமிருப்பவர்கள் வடக்கு நோக்கி இருந்து சாவார்கள். அப்படிச் சாவதற்காக உண்ணாவிரதமிருப்பதை ‘வடக்கிருத்தல் ' என்றால் செத்துப்போவது என்று பொருள்.
இப்பொழுது 'வடநாடு நரகலோகமும் அல்ல, அங்கே எமகிங்கரருமில்லை' என்பவர்கள் பழந்தமிழ் இலக்கியம் தெரியாததால் அப்படிச் சொல்லுகிறார்கள்.
இப்பொழுதுகூட நமது வீடுகளில் உள்ள பெரியவர்கள்,'வடக்கே தலை வைத்துப் படுக்காதே' என்கிறார்கள். ஏன் என்று கேட்டால் காரணம் சொல்லத் தெரியாது. இந்தப் பழமொழி. நெடுங்காலமாக வழங்கிவருகிறது. வடக்கே ஏதோ ஒரு கூட்டம் இருக்கிறது; அது நமது தலையைத் தடவிவிடும் என்பதுதான் இந்தப் பழமொழி ஏற்படக் காரணமாக இருந்திருக்கவேண்டும்
படித்துப் பாருங்கள் விளக்கம் கிடைக்கும்!
'அகில இந்தியாவின் முடிசூடா மன்னர்' என்று புகழப் படுகிறாரே பண்டித ஜவஹர்லால் நேரு — அவர் சிறையிலிருந்தபோது, தம் மகள் இந்திராவுக்கு எழுதிய கடிதத்தில் விந்திய மலைக்குத் தெற்கே இருப்பதைத் 'திராவிடம்' என்றும் வடக்கே இருப்பதை 'ஆரியவர்த்தம்' என்றும் குறிப்பிட்டிருக்கிறார். மேலும் அவர் அந்தக் கடிதத்தில் தெற்கே இருப்பவர்கள் திராவிடர்கள் என்றும் வடக்கே இருப்பவர்கள் ஆரியர் என்றும் இந்த இரு சாராரும் கலந்திருந்தபோதிலும், தென்னாட்டில் 100—க்கு 90 பேர் திராவிடக் கலாசாரத்தையே இப்போதும் பின்பற்றி வருகிறார்கள் என்றும் எழுதியிருக்கிறார். இந்தப் புத்தகம் காங்கிரசுப் படிப்பகங்களில் இருக்குமானால் படிக்கும் பழக்கமுள்ள காங்கிரசுக்காரர்கள் வாங்கிப் படித்துப் பார்க்கலாம்.
அவர்களை விட நான் ஆற்றல் பெற்றவனல்ல!
அமைச்சர் சி. சுப்பிரமணியம் டில்லியிலே திராவிடத்துக்காகவும் வாதாடினேன் என்று பேசியது அவர் மனம் மாறியதால் அல்ல; நான்
15