திராவிட தேசீயம்!
அழகாகப் பேசியதாலும் அல்ல; அழகாகப் பேசுவதற்கு என்றால் நாம் சட்டமன்றத்திற்குப் போகவும் தேவையில்லை.
சிறந்த பேச்சாளர் தேவை என்றால் — ஏ. இராமசாமி (முதலியார்) இருக்கிறார்; கல்வித் துறையில் வல்லுநர் தேவை என்றால், ஏ. இலட்சுமணசாமி இருக்கிறார்; இன்னும் சர். சி. பி. இராமசாமி, இராசகோபாலாச்சாரி போன்றவர்களெல்லாரும் இருக்கிறார்கள்; எப்படிப்பட்ட எதிர்ப்புக்கும் அஞ்சாது, காரியத்தில் வெற்றி பெறக் கூடியவரான என்னுடைய ஒரே தலைவர் பெரியார் இராமசாமி இருக்கிறார் — இப்படிப் பட்டவர்களை யெல்லாம் விட நான் பெரிய ஆற்றல் பெற்றவனல்ல.
சென்றவர்களைக் கேட்டோம் சொன்னது இதுதான்!
ஒரு சில தினங்களுக்கு முன்பு, டெல்லியில் நடந்த 'தேசீய அபிவிருத்திக் குழு'க் கூட்டத்திற்கு நம் நிதியமைச்சர் சென்று வந்தார். 'தேசீய அபிவிருத்திக் குழு' என்று அதற்குப் பெயர் இருப்பதே, இன்னும் தேசீயம் வளரவில்லை என்பதைக் குறிப்பிடுவதாகிறது. தேசீயம் உண்மையில் இருக்குமானால், அதற்கு அபிவிருத்தி தேவையில்லை! ஒவ்வொரு மாநிலத்தின் முதலமைச்சரும் சென்று, 'எங்கள் மாநிலத்துக்கு அந்தத் திட்டம் வேண்டும், இந்தத் திட்டம்வேண்டும்' என்றெல்லாம் கேட்பார்கள்; விவாதம் நடைபெற்ற பிறகு அக்குழு இறுதியாக, எதைச் செய்வது என்று முடிவு செய்யும்.
அந்தத் தடவை, திரு. சுப்பிரமணியம் டெல்லிக்குச் சென்று திரும்பியதும், நாங்கள் அவரைப் பார்த்து, 'டெல்லிக்குச் சென்றீர்களே, என்ன கொண்டு வந்தீர்கள்?' என்று கேட்டோம். கொத்தவால்சாவடிக்குப் போனால் வாழைப் பழமாவது வாங்கி வருவார்கள்; டெல்லிக்குச் சென்றீர்களே, அங்கிருந்து வாங்கி வந்தது தான் என்ன? எதைக் காட்டப்போகிறீர்கள்? கொசு கடித்த தழும்பைக் காட்டப் போகிறீர்களா? நாம் கேட்ட திட்டங்களில் கொடுத்தது போக, கிழித்துப் போட்டதைக் காட்டப் போகிறீர்களா'? என்று கேட்டோம்.
அதற்கு அவர் "நான் டெல்லியிலே வாதாடினேன். தமிழ்நாட்டுக்கு மட்டுமல்லாமல் திராவிடத்துக்காகவும் வாதாடினேன்; இது அண்ணா-
16